ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்!.. விஜயை கைவிட்ட திரையுலகம்.. இதுதான் காரணமா?…

Published on: January 7, 2026
jananayagan
---Advertisement---

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி வருகிற 9ம் தேதி என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதியே படத்தை சென்சார் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பியது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சில மாற்றங்களை சொல்ல அதையும் செய்து படக்குழு கடந்த டிசம்பர் 25ம் தேதி மீண்டும் கொடுத்துவிட்டனர். ஆனால் இப்போது வரை சென்சார் கொடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக படத்தை தயாரித்த கே.வி.என் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. படத்தை இன்னும் சிலர் பார்க்க வேண்டும். சில தவறுகள் இருக்கிறது. சென்சார் கொடுக்க கால அவகாசம் வேண்டும் என சென்சார் தரப்பு கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வருகிற 9ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

Also Read

9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருருக்கும் நிலையில் தீர்ப்பும் 9ம் தேதி என சொல்லியிருப்பதால் அந்த தேதியில் ஜனநாயகன் படம் வெளியாகுமா என்கிற கேள்விக்குறி எழுந்திருக்கிறது. இது விஜய் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு பக்கம் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறையை எதிர்த்து திரையுலகில் இருந்து எந்தக் குரலும் வரவில்லை. ஜனநாயகன் படத்திற்காகவோ இல்லை விஜய்க்கு ஆதரவாகவோ எந்த நடிகர், நடிகையும் ஆதரவு குரல் கொடுக்கவில்லை.

jananayagan

ஒருபக்கம் நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தியேட்டர் அதிபர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம் என எல்லாமே அமைதியாக இருக்கிறார்கள். ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி போல எக்ஸ் தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகர்கள் கூட இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

விஜய் அரசியல்வாதி ஆகிவிட்டதாலும், ஆளும் திமுக அரசை அவர் கடுமையாக விமர்சித்து வருவதாலும் அவருக்கு ஆதரவு கொடுத்தால் நமது படத்திற்கு சிக்கல் ஏற்படும்.. எதற்கு தேவையில்லாத பிரச்சினை என எல்லோருமே நினைப்பதாக தெரிகிறது. ஒருபக்கம் ‘மற்ற படங்களுக்கு பிரச்சினை என வந்தபோது விஜய் யாருக்கு குரல் கொடுத்தார்?.. அவர் மௌனமாகத்தானே இருந்தார்.. எனவேதான் மற்றவர்களும் அவருக்கு குரல் கொடுக்கவில்லை’ என்கிறார்கள் சிலர்.