தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலம். அது எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், பிரபு கார்த்திக் என இதுவரை ஒருவரை கூட ஒரு நடிகரை கூட விட்டு வைக்கவில்லை என்று கூறலாம். ஏன் சிம்பு, சிவகார்த்திகேயன், அதர்வா வரையில் இந்த போலீஸ் யூனிஃபார்மை மாட்டாத நடிகர் இல்லை என்றே கூறும் அளவிற்கு பெரும்பாலும் அனைவரும் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து விட்டனர்.
எம்ஜிஆர் நடித்த என் கடமை, சிவாஜி கணேசனின் தங்கப்பதக்கம், ரஜினியின் மூன்று முகம், கமலின் காக்கி சட்டை, விஜயகாந்த்திற்கு கேப்டன் பிரபாகரன், அஜித்தின் மங்காத்தா, விஜய் போக்கிரி, சாமி – விக்ரம் சிங்கம் – சூர்யா என போலீஸ் யூனிஃபார்ம் பலருக்கும் பெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
இதையும் படியுங்களேன் – இயக்குனர் பாலாவுக்கு நெருக்கடி.! தீபாவளிக்கு சூர்யா படம் ரிலீஸ்.! தயாரிப்பாளரின் பலே திட்டம்.!
இருந்தாலும், இந்த போலீஸ் யூனிஃபார்மை மாட்டாத நடிகர் என்றால் சட்டென நினைவுக்கு வருவது இரண்டு தேசிய விருதுகளை வாங்கிய நடிப்பு அசுரன் தனுஷ் தான். அவரது உடல் வாகுக்கு போலீஸ் கதாபாத்திரம் சரிப்பட்டு வராது என்பதால் இதுவரை அந்த கதாபாத்திரத்தை மட்டும் விட்டு வைத்துள்ளார் தனுஷ்.
அதேபோல 80’s தொண்ணூறுகளில் முன்னணி நாயகர்களுக்கு டஃப் கொடுத்து வந்த மைக் மோகன் இதுவரை போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்ததாக தகவல் தெரியவில்லை.
நடிகர் சந்தானம் காமெடி வேடங்களில் நடிக்கும்போது போலீஸ் யூனிபார்ம் போட்டு உள்ளார். ஆனால் அவர் கதாநாயகனாக மாறிய பின்பு போலீஸ் கதாபாத்திரத்தில் அவர் நடித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜீவாவும் இதுவரை போலீஸ் கதாபாத்திரம் செய்தது இல்லை.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…