Connect with us
muthu

Cinema News

‘முத்து’ல குதிரை வண்டி ஞாபகம் இருக்கா? அப்படி படங்களில் மறக்க முடியாத வண்டிகளை பார்ப்போமா?

பெரும்பாலான படங்களில் ஒரு சில விஷயங்கள் அப்படியே நம் மனதில் பதிந்து போகும். அது படத்தில் இருக்கும் கதை ,ஹீரோ ,ஹீரோயின் இவையெல்லாம் தாண்டி அந்த ஒரு விஷயம் மட்டும் எப்போதுமே நம் ஞாபகத்திற்கு வந்து வந்து போகும். அப்படி ஒரு சில படங்களை நாம் நினைத்து பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றுவது இப்படிப்பட்ட சில விஷயங்களாக தான் இருக்கும்.

உதாரணமாக முத்து படத்தில் ரஜினி, மீனா, தில்லானா தில்லானா பாடல் இவைகளை எல்லாம் தாண்டி நம் ஞாபகத்திற்கு முதலில் வருவது ரஜினி பயன்படுத்திய அந்த குதிரை வண்டி தான். படம் முழுக்க அந்த குதிரை வண்டியை நாம் பார்க்க முடியும். இந்த மாதிரி என்னென்ன படங்களில் எந்த மாதிரியான வண்டிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை பற்றி தான் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

sundara

sundara

முரளி, வடிவேலு காம்போவில் வெளியான சுந்தரா டிராவல்ஸ். இந்த படத்தில் மையக் கருவாக அமைந்தது ஒரு பேருந்து. அந்த பேருந்துக்கு சுந்தரா ட்ராவல்ஸ் என பெயர் வைத்து படம் முழுக்க அந்த பேருந்தை வைத்தே இயக்குனர் படத்தை ஓட்டி இருப்பார். அந்தப் படம் ரிலீஸ் ஆன போது கூட தமிழ்நாட்டில் பல ஊர்களில் படப்பிடிப்பில் பயன்படுத்திய அந்த பேருந்தை வரவழைத்து படத்தை புரமோட் செய்திருந்தார்கள்.

அடுத்ததாக கரகாட்டக்காரன் படம். கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் ,கனகா, கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்தப் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த ஒரு பெரிய வெற்றிப் படம் .இந்த படத்தை நாம் கூறும் பொழுது நம் ஞாபகத்திற்கு வருவது ராமராஜன் பயன்படுத்திய கார். அதுவும் சொப்பன சுந்தரி கார். அந்த காமெடி இப்போது வரை அனைவர் மத்தியில் மிகவும் பிரபலமானது .

அதற்கான விடை இன்னும் யாருக்கும் தெரியவில்லை. அதைப்போல பிரசாந்த் மற்றும் கிரண் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம். அந்த படத்தில் வடிவேலு பயன்படுத்திய மூன்று சக்கர வண்டி. அதுவும் வடிவேலு எப்பொழுதெல்லாம் படத்தில் வருகிறாரோ அப்பொழுதெல்லாம் அந்த வண்டியை தான் பயன்படுத்தி இருப்பார் .அதுவும் அந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்தது.

அதைப்போல பஞ்சதந்திரம் படத்தில் ஒரு காமெடி காட்சியில் டொயோட்டா பிரிவியா காரை பயன்படுத்தி இருப்பார்கள். பஞ்சதந்திரம் படத்தை நாம் ஞாபகப்படுத்தி பார்க்கும் பொழுதும் அந்த காமெடி காட்சியும் கூடவே அந்த காரும்தான் நம் ஞாபகத்திற்கு வரும். இப்படி பல படங்களில் இந்த மாதிரி எந்தெந்த மாதிரியான வண்டிகள் படத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கின்றன என நிறையவே இருக்கின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top