இவர்தான் கோலிவுட்டின் அடுத்த அனிருத்தா? அட்லீ படத்தை கூட லாக் பண்ணிட்டாருப்பா!

by Akhilan |   ( Updated:2025-04-09 08:47:43  )
இவர்தான் கோலிவுட்டின் அடுத்த அனிருத்தா? அட்லீ படத்தை கூட லாக் பண்ணிட்டாருப்பா!
X

Kollywood: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலத்திலும் சில இசையமைப்பாளர்கள் வைரலில் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு அனிருத் மட்டுமே இசையமைத்து வருகிறார். தற்போது அந்த இடத்தை தட்டி தூக்கியிருக்கிறார் இளம் இசையமைப்பாளர்.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு தலைமுறையிலும் சில இசையமைப்பாளர் தங்களுடைய ஆதிக்கத்தை படைத்து வருவார்கள். 90களில் இளையராஜா தொடங்கி அடுத்து வந்த ஏ ஆர் ரகுமான் வரை புது இசை அமைப்பாளர்கள் வந்தாலும் கூட இவர்களுடைய ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கும்.

அப்படி கடந்த சில வருடங்களாகவே அனிருத் தான் தமிழ் சினிமாவை ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்து வருகிறார். கமல், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப்ஹிட் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தற்போதும் கூட விஜயின் ஜனநாயகன், கமல்ஹாசனின் தக் லைஃப், ரஜினிகாந்தின் கூலி மற்றும் ஜெயிலர் 2 உள்ளிட்ட திரைப்படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார். அவரை இனி அசைக்க முடியாது என எண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் அவருடைய இடத்திற்கு ஆபத்து வந்திருக்கிறது.

ஆல்பம் பாடல்களால் வைரலான சாய் அபியங்கர் தற்போது கோலிவுட் சென்சேஷன் இசையமைப்பாளராக மாறி இருக்கிறார். தொடர்ச்சியாக பல புதிய படங்களுக்கு இசையமைப்பு அனிருத்திற்கு பதில் இவர் கைக்கு மாறி வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், சூர்யா நடிப்பது 45 வது திரைப்படத்தையும், எஸ் டி ஆர் நடித்த 49 வது திரைப்படத்தையும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் பென்ஸ் திரைப்படத்தையும், பிரதீப் ரங்க நாதனின் நான்காவது படத்தையும் இசையமைத்து வருகிறார்.

இது மட்டுமல்லாமல் தற்போது கூலி படத்தின் இன்னொரு இசையமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் மிகப்பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் மற்றும் அட்லீ இணைந்து உருவாக்கும் அல்லு அர்ஜுனின் 22வது படத்தினையும் சாய் அபியங்கர் கையில் கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Next Story