மீண்டும் ராசியில்லை என ஒதுக்கப்படும் முன்னணி நடிகை... மறுபடியும் முதல்ல இருந்தா?
அக்கட தேசத்தில் டாப் நடிகையாக வலம் வருபவர் தான் அந்த இளம் நடிகை. ஆரம்பகாலத்தில் அவர் கோலிவுட்டில் அறிமுகமான முதல் படமே படுதோல்வியை தழுவியதால் ராசி இல்லாத நடிகை என கூறி ஒதுக்கப்பட்டார். அதன் பின்னரே அந்த நடிகை அக்கட தேசத்திற்கு சென்று ஒரு சில ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
அவர் நடிப்பில் வெளியான படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் பட்டி தொட்டியெங்கும் வெற்றி பெற்றதால், நடிகையின் மார்க்கெட் எகிறியது. அதன் பின்னர் தொடர்ந்து பெரிய ஹீரோ மற்றும் பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் தான் நடிகைக்கு கிடைத்து வந்தது. அந்த வகையில் தெலுங்கில் ஒரு டாப் நடிகர் படத்திலும், தமிழில் மாஸ் நடிகர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு நடிகைக்கு கிடைத்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களும் தோல்வி அடைந்தன. என்னதான் இயக்குனர், ஹீரோ மற்றும் கதை காரணமாக ஒரு படம் தோல்வி அடைந்தாலும், இறுதியாக நடிகையின் ராசி தான் சரியில்லை என கூறி அந்த நடிகையின் தலையில் மொத்த பழியையும் தூக்கி போட்டு விடுவார்கள்.
அதுதான் தற்போது இந்த நடிகைக்கும் நடந்துள்ளது. நடிகையின் பழைய ராசி தற்போதும் அப்படியே நீடிக்கிறது என நினைத்த தயாரிப்பாளர்கள் புதிதாக அந்த நடிகையை படங்களில் ஒப்பந்தம் செய்ய பயப்படுகிறார்களாம். மேலும் சிலரோ கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்ப கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இதற்கெல்லாம் அசராத அந்த நடிகை தற்போது கைவசம் உள்ள கடவுள் பெயர் கொண்ட ஹீரோவுடன் தான் நடித்து வரும் படம் நிச்சயம் ஹிட்டாகும். அந்த படம் ஹிட்டான பின்னர் மீண்டும் தன்னை தேடி தயாரிப்பாளர்கள் வந்து குவிவார்கள் என மிகவும் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உள்ளாராம்.