பாக்கியலட்சுமி சீரியலில் எண்ட்ரி கொடுத்த தமிழ் டாப் ஹீரோ… பாக்கியாவே லீக் செய்த ஷூட்டிங் வீடியோ!

by Akhilan |   ( Updated:2023-09-28 05:01:14  )
பாக்கியலட்சுமி சீரியலில் எண்ட்ரி கொடுத்த தமிழ் டாப் ஹீரோ… பாக்கியாவே லீக் செய்த ஷூட்டிங் வீடியோ!
X

Bakkiyalakshmi: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கெஸ்ட் ரோலில் தமிழ் சினிமாவின் பிரபல ஹீரோ எண்ட்ரி கொடுத்து இருப்பதாக கூறும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

பாக்கியலட்சுமி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தமிழ் சீரியல். இந்த நிகழ்ச்சி ஸ்டார் ஜல்ஷா தொடரான ​​ஸ்ரீமோயியின் அதிகாரப்பூர்வ ரீமேக் எனக் கூறப்படுகிறது. இந்த சீரியல் ஹாட்ஸ்டாரிலும் கிடைக்கிறது.

இதையும் படிங்க: கதை பிடித்துப் போக சம்பளமே வாங்காமல் நடித்த நடிகை! இப்ப யாராச்சும் அப்படி இருக்கீங்களா?

2020ல் இருந்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பாக்கியாவாக கே.எஸ். சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி, கோபி வேடத்தில் சதீஷ் குமார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குடும்ப பெண்ணை சுற்றி இந்த கதை நடந்து வருகிறது.

விஜய் தொலைக்காட்சியின் விருது விழாவில் பாக்கியலட்சுமி தொடர்ந்து விருதுகளை குவித்து இருக்கிறது. இத்தனை சிறப்புகளை கொண்ட சீரியல் இன்று பெண்களின் ஹிட் லிண்ட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகியான சுசித்ரா இன்ஸ்டாவில் எப்போதுமே ஆக்ட்டிவாக இருப்பவர்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல்: வெளிச்சத்துக்கு வந்த ஈஸ்வரியின் கல்லூரி வேலை…வாயை கொடுத்து கதிரிடம் வாங்கி கட்டும் ஜனனி…

அவர் தன்னுடைய இன்ஸ்டாவில் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், பாக்கியலட்சுமியின் ஷூட்டிங் போல இருக்கிறது. இதில் அம்ருதா குழந்தையை வைத்து அழுதுக்கொண்டு இருக்கிறார். அருகில் பாக்கியா, இனியா இருவரும் நின்று சண்டைப்போட்டு கொண்டு இருக்கின்றனர்.

இதில என்ன ஸ்பெஷலுனு கேட்குறீங்களா? அந்த வீடியோவில் நடிகர் சித்தார்த்தும் இருக்கிறார். இந்த போஸ்ட்டில் அவருடன் பணிபுரிந்ததில் சந்தோஷம் என கமெண்ட் தட்டி இருந்தார். அதை வைத்து பார்க்கும் போது சித்தார்த்தின் சித்தா படத்துக்கான ப்ரோமோஷனாக சில காட்சிகள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வீடியோவைக்காண: https://www.instagram.com/reel/Cxsc3zXxIXc/?utm_source=ig_web_copy_link

Next Story