Categories: latest news

ஹிட்டடித்தா சும்மா இருக்க மாட்டாங்களே… கேஜிஎஃப் கதையை கையில் எடுக்கும் தமிழ் சினிமா!..

KGF: கன்னட சினிமாவின் வரலாற்றை மாற்றிய கேஜிஎஃப் கதையில் தமிழில் முக்கிய படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் படங்கள் மட்டுமே பேன் இந்தியா புகழை பெறும் என எதிர்பார்ப்புகளை காலி செய்த முக்கிய படங்களின் லிஸ்ட்டில் கன்னட சினிமா இணைந்தது. இதற்கு முக்கிய காரணமே கேஜிஎஃப் திரைப்படம் தான். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் முடிய எப்போ இரண்டாம் பாகம் வரும் என கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிங்க:  மீனாவை அடித்த சிட்டி… கோபி போட்ட சபதம்… ராஜியிடம் சண்டையிட்ட கோமதி!

தொடர்ந்து பல வருட எதிர்பார்ப்புகளை உருவாக்கி வெளியானது கேஜிஎஃப் திரைப்படம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. கன்னடா சினிமாவின் நிலையையே மாற்றியது. இதனால் யஷ் உச்சநடிகராக உயர்ந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் மூன்றாம் பாகம் அடுத்தாண்டு கடைசியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க யஷ் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் கதை ரசிகர்களிடம் மேலும் வரவேற்பை பெறும் எனக் கூறப்படுகிறது. இந்த பாகத்தில் நடிகர் அஜித்குமார் முக்கிய கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த ஒரு ஷாம்பூ டப்பாவ ரெடி பண்ணும் வைரமுத்து! சுசித்ரா சொன்னது சரிதான்

இது ஒரு புறமிருக்க கேஜிஎஃப் கதையை சுற்றி தமிழ் படங்கள் தற்போது தங்கள் ரூட்டை மாற்றி இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி நடிப்பில் வெளியான தங்கலான் இக்கதையை சேர்ந்தது. அதுபோலவே, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் திரைப்படமும் கேஜிஎஃப் பின்னணியில் தான் உருவாக இருக்கிறதாம். தொடர்ச்சியில் கேஜிஎஃப் கதையில் உருவாகும் படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Akhilan

Recent Posts

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

1 hour ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

2 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

3 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

3 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

10 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

13 hours ago