Categories: Cinema News latest news tamil cinema gossips

இப்போ இதுதான் ட்ரெண்டு.., ‘கொம்பன்’ முத்தையா காட்டில் அடைமழை.! கார்த்தி, கமல், ஆர்யா, ஜெயம் ரவி.?

தமிழ் சினிமாவில் அவ்வப்போது காலத்திற்கு ஏற்ப டிரென்ட் மாறி வரும். அதாவது காமெடி படங்களாக வரும், அந்த சமயம் ஒரு பேய் படம் ஹிட் கொடுத்து விட்டால் அடுத்தது பேய் படங்களாக வரும்.

அப்படி தற்சமயம் கேங்ஸ்டர் திரைப்படங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஆக்ஷன் படங்களாகவும் வந்துகொண்டிருக்கிறது. இதில் குடும்ப பின்னணி கிராம பின்னணி கொண்ட படங்கள் வருவது கொஞ்சம் குறைந்து காணப்படுகிறது.

இந்த சமயத்தில்தான் கொம்பன் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

கொம்பன் முத்தையா கிராமத்து கதைகளை இயக்குவதில் கெட்டிக்காரர். இவர் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்குவதற்கு சம்மதித்து இருந்தாராம். அதில் ஆர்யா ஹீரோவாக நடிப்பதாக இருந்ததாம்.

இதையும் படியுங்களேன் –  கொஞ்சம் கூட இரக்கம் இல்லாத இலங்கை சினிமாகாரர்கள்.! என்ன காரியம் செய்ராங்க தெரியுமா.?!

பின்னர், கமல் தயாரிப்பில் இருந்து இருவரும் விலகி ஆர்யா – கொம்பன் முத்தையா கூட்டணி வேறு ஒரு தயாரிப்பாளரை அணுகலாம் என்ற முடிவுக்கு வந்ததாம். இதற்கிடையில் தற்போது ஜெயம் ரவியிடம் ஒரு கதை கூறி கொம்பன் முத்தையா ஓகே வாங்கி விட்டாராம்.

அடுத்தடுத்து ஆர்யா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படங்களை இயக்க கொம்பன் முத்தையா தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதில் எந்த படத்தை கமல் தயாரிக்கிறார், இல்லை இரு படத்தையும் வேறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கிறார்களா என்பது அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியானால் தான் நமக்கு தெரியவரும்.

Published by
Manikandan