ரெட்ரோ விஜயகாந்தை பாத்த மாதிரியே இருக்கேப்பா… கொம்பு சீவி கிளிம்ப்ஸ் வீடியோ!

kombu seevi
Shanmuga pandian: பிரபல நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் ஹீரோவாக நடிக்கும் கொம்புசீவி படக்குழு அவர் பிறந்தநாளில் வெளியிட்டு இருக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படம் கொம்புசீவி. சண்முகப்பாண்டியனுடன் இணைந்து சரத்குமார், காளிவெங்கட், தருணிகா உள்பட பலர் நடித்துள்ளனர். பொன்ராம் இயக்கியுள்ளார்.

1996ல் மதுரை, உசிலம்பட்டி, கம்பம் பகுதியில் நடக்கப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். விறுவிறுப்பாகத் தயாராகி வருகிறது. போஸ்டரில் கம்பை வைத்து வேகமாக பாய்ந்து வருவது போன்ற சண்முகப்பாண்டியனின் போஸ்டர் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வேற லெவலில் இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் இன்று சண்முகப்பாண்டியனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. ஸ்டார் சினிமா தயாரிப்பில் கொம்பு சீவி உருவாகிறது.
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இயக்குனர் பொன்ராம் தான் இந்தப்படத்துக்கும் இயக்குனர் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பை நிலவி வருகிறது. ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் உசிலம்பட்டி. தேர் லிவ்ட் அ பாண்டி என தொடங்கி இந்த வீடியோ ஆச்சரியத்தினை உருவாக்கி இருக்கிறது.
இதில் ரெட்ரோ ஸ்டைலில் விஜயகாந்தை பார்ப்பது போலவே சண்முக பாண்டியன் தோன்றி இருக்கிறார். இவரின் ரோல் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.