தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராகவும் மனிதாபிமானம் மிக்க நடிகராகவும் இருந்தவர் விஜயகாந்த். அவர்கள் குணத்திற்காகவே மக்களால் போற்றப்பட்டார் விஜயகாந்த். அவருக்கு பின் அவரின் குடும்பத்தில் இருந்து வந்த ஒரு நடிகர்தான் அவரின் மகன் சண்முக பாண்டியன். 10 வருடங்களுக்கு முன்பு சகாப்தம் என்கிற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மதுர வீரன், படைத்தலைவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், இந்த படங்கள் பேசப்படவில்லை.
எனவே, சிவகார்த்திகேயனை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமத்துரை போன்ற படங்களை இயக்கிய பொன்ராமுடன் கூட்டணி அமைத்தார் சண்முக பாண்டியன். இந்த படத்தில் சரத்குமாரும் ஒரு முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், முதல் நாள் இப்படம் 30 லட்சமும், இரண்டாம் நாளில் 30 லட்சம் என வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. மூன்றாம் நாளான நேற்று இப்படம் 36 லட்சம் வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. மொத்தத்தில் கடந்த மூன்று நாட்களில் இப்படம் 96 லட்சம் வரை வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
சண்முகபாண்டியன் முந்தைய படங்களை ஒப்பிடும்போது கண்டிப்பாக கொம்பு சீவி திரைப்படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.
