kombu (1)
விஜயகாந்த் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் நடிக்கும் கொம்புசீவி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தை பொன்ராம் இயக்கியிருக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சண்முக பாண்டியன் இதற்கு முன் சகாப்தம், படைத்தலைவன் மற்றும் மதுரவீரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனால் கொம்புசீவி படத்தை எதிர்பார்த்து குறிப்பாக விஜயகாந்த் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தில் சண்முகபாண்டியனுடன் சரத்குமார் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கொம்புசீவி படம் ஒரு கிராமத்தில் நடக்கும் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கிறது.
இந்த நிலையில் இன்று கொம்புசீவி படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. அதில் சரத்குமார் ஒரு வசனம் பேசியுள்ளார். அதாவது சத்ரியனாக இருக்கிறதை விட சாணக்யனா இரு என்று பேசியிருப்பார். இதில் சத்ரியன் என்பது விஜயகாந்த் நடித்த படம். சாணக்யன் என்பது சரத்குமார் நடித்த படம். இந்த வசனம் சரத்குமாருக்காகவே வைக்கப்பட்டதை போல் இருக்கிறது.
இதை போல படத்தில் ஏகப்பட்ட வசனங்கள் இருப்பதாக சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவர் பெரும்பாலும் ஒரு பேட்டி கொடுக்கிறார் என்றால் அதில் சில விஷயங்கள் வைரலாகும். அதை நியாபகப்படுத்தும் விதமாகவும் இந்தப் படத்தில் வசனங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார். டிரெய்லரில் சண்முகப்பாண்டியன் ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பிடலெடுத்திருக்கிறார்.
ரொமான்ஸ் காட்சியில் நடிப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்த சண்முக பாண்டியன் ரொமான்ஸ் காட்சிகளிலும் அற்புதமாக நடித்திருக்கிறார். படம் கிறிஸ்மஸ் விடுமுறையாக டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…