கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தும் அவருக்கு ஒரு சரியான ஒரு வெற்றிப் படம் அமையவில்லை. கடைசியாக வெளியான படைத்தலைவன் திரைப்படமும் பேசப்படவில்லை.
இந்நிலையில்தான் பொன்ராம் இயக்கத்தில் சரத்குமாருடன் இணைந்து சண்முக பாண்டியன் நடித்திருக்கும் கொம்பு சீவி திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் பிரீமியர் ஷோவை சிலர் படத்தைப் பற்றி ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

படத்திற்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. முதல் பாதி அசத்தலான சண்டை காட்சிகளுடன் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது. இரண்டாம் பாதியில் எமோஷனல் மற்றும் காமெடி காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று பலரும் சொல்கிறார்கள்.
இந்த படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. படத்தில் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக இருப்பதால் படம் போரடிக்காமல் செல்கிறது. சண்முக பாண்டியன், சரத்குமார் இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் பின்னணி இசை சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ‘வஸ்தாரா’ பாடல் நன்றாக வந்திருக்கிறது. இயக்குனர் பொன்ராம் இதற்கு முன் இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி தர்ணிகா சிறப்பாக நடித்திருக்கிறார்.
கிளைமாக்ஸில் வரும் திருப்பம் ரசிக்க வைக்கிறது.. கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம்.. படத்தில் வரும் காமெடி காட்சிகள் ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைக்கிறது.. அதுவே படத்திற்கு பலம்’ என ஒருவர் பதிவிட்டு இருக்கிறார்.