இதில் கூடவா தல, தளபதி, சூர்யா போட்டி போடுறாங்க!...தமிழ் சினிமா எங்கதான் போகுதோ?....
RRR,KGF,புஷ்பா போன்ற பிற மொழிப்படங்களில் வருகையால் தமிழ் படங்களின் மவுசு கொஞ்சம் குறையத் தொடங்கியுள்ளது,
இதற்கு இடையில் தமிழ் ஹீரோக்களிடையே சம்பளத்தில் போட்டி நிலவுகிறது.
நம் தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடம் இருப்பவர் நடிகர் ரஜினி,சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற தவறியது,இருப்பினும் சம்பளம் மட்டும் 100கோடியை தொட்டது.
ரஜினியை தொடர்ந்து அடுத்த ஸ்டார் நடிகர் விஜய் தான்,நடிகர் விஜயின் பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை,தோல்வியை தழுவியது,இருப்பினும் விஜயின் 66 படத்திற்கு மட்டும் அவர் தமிழில் 80 கோடியும்,தெலுங்கிற்கு 40கோடியும் சம்பளமாக வாங்கயுள்ளார்.
நடிகர் விஜய் தனது ஒவ்வொரு படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்கு தனது சம்பளத்தை 20 சதவீதம் அதிகரித்து வருகிறார்.படத்தின் வெற்றி தோல்வியை கண்டுகொள்ளாது தனது சம்பளத்தை மட்டும் அதிகம் வாங்குவது முறையாகாது.
நடிகர் விஜய்-யை தொடர்ந்து திரை உலகில் அவருக்கு போட்டியாக இருப்பது நடிகர் அஜித் தான், அஜித்தின் வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை.வலிமையில் அஜித்திற்கு சம்பளம் மட்டும் 65 கோடியாம்,இருப்பினும் அவரும் விஜய்-யை தொடர்ந்து தனது சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளார்.
இந்த 3 நடிகர்களுக்கு அடுத்தபடியாக இருப்பது நடிகர் சூர்யா, அவரும் படத்துக்கு படம் குறைவில்லாமல் தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறார்.
அவரை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்த,அவருக்கு போட்டியாக நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை உயர்த்துகிறார்.
இப்படியே போன ஒரு படத்தின் பட்ஜட்டில் 75 சதவீதம் நடிகர்களின் வருமானமாகவே செல்கிறது,இதனால் தான் தமிழ் படத்தின் தரமும் குறையத் தொடங்கியுள்ளது.அதனால் படத்தின் வெற்றி தோல்வியை கணக்கில் கொண்டே ஹீரோக்களின் சம்பளத்தை வழங்க வேண்டும் என்கிற கருத்து திரைத் துறையினரிடையே நிலவி வருகிறது
போட்டி சிறந்த நடிப்பில் இருக்க வேண்டுமே தவிர சம்பளத்தில் அல்ல .