கொட்டுக்காளி விழாவில் மிஷ்கின் வேணும்னே பேசினாரா? எதுக்கு இந்த அலப்பறை?

by sankaran v |
Myskin
X

Myskin

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்த கொட்டுக்காளி படத்தின் ஆடியோ லாஞ்ச் நடந்தது. அந்த நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் கலந்து கொண்டு இந்தப் படம் தரமாக உள்ளது. இந்தப் படம் நல்ல விஷயத்தைச் சொல்லுது.

இந்தப் படத்தை யாரும் பார்க்கலேன்னா நான் அவுத்துப் போட்டுக்கூட ஆடுவேன் என்று இயக்குனர் மிஷ்கின் சொல்லி இருந்தார். அது மட்டுமல்லாமல் சூரி கொட்டுக்காளி படத்தில் யூரின் போகிற காட்சியில் நடித்ததைப் பற்றி விளக்கம் வேறு கொடுத்து இருந்தார்.

அதாவது அந்தக் காட்சியில் யூரின் போகும்போது அப்படி காட்ட மாட்டாங்களா? இப்படி காட்ட மாட்டாங்களான்னு வேறு அவருக்கு ஆர்வம் இருந்ததாம். என்னத்தைச் சொல்ல? மிஷ்கின் இப்படி பேசுனது திரையுலகில் பலத்த சர்ச்சைக்குள்ளானது. மேடை நாகரிகம் இல்லாமலா இப்படி ஒரு பெரிய இயக்குனர் பேசுவார் என்று பலரும் பேசும்படி ஆனது.

KKli

KKli

கொட்டுக்காளி படத்தோட ஆடியோ லாஞ்ச்ல மிஷ்கின் பேசிய விதம் முகச்சுழிப்பை ஏற்படுத்தி இருந்தது? அவர் ஏன் இந்த மாதிரி பேசுனாரு? வேணும்னே இப்படி எல்லாம் பேசுறாரான்னு நேயர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுருக்காங்க.

அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். தன்னுடைய மேடைப்பேச்சால் மற்றவர்களோட கவனத்தை ஈர்க்க வேண்டிய அவசியம் மிஷ்கினுக்கு இருப்பதாக நான் நினைக்கல. ஏன்னா அவரைப் பொருத்த வரைக்கும் அவர் ஒரு பிரபலமான இயக்குனர். அவர் பல மேடைகளில் பேசுவதைப் பார்த்திருப்பீங்க. பொதுவாகவே மேடைகளில் இப்படி பேசுவதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் இயக்குனர் மிஷ்கின் என்றார்.

கொட்டுக்காளி படம் பெர்லின் படவிழாவில் திரையிடப்பட்டதும் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்று விட்டது. சூரியின் தரமான நடிப்பும், வினோத்ராஜின் இயக்கமும் படத்துக்கு பிளஸ். படத்தில் லைவ் சவுண்டு தான். பின்னணி இசை கிடையாது. அந்த வகையில் இது 2வது படம். முதல் படம் கடைசி விவசாயி என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story