இப்படி போர் அடிச்சிருக்க கூடாது… கொட்டுக்காளி படத்தில் சூரி மட்டும்தான்… ட்விட்டர் விமர்சனம்
Kottukaali: நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் கலவையான ட்விட்டர் விமர்சனத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் கொட்டுக்காளி. லிட்டில் வேவ் நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் ரிலீசுக்கு முன்பே பல ஃபிலிம் ஃபெஸ்டிவல் வெளியானது.
இதையும் படிங்க: அந்த தேதில ரிலீஸ் பண்ணி எதுக்கு பல்ப் வாங்கணும்… அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கிய சூர்யா!..
பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று ட்விட்டர் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. சொல்ல வந்த விஷயம் சரியாக இருந்தாலும் அதை இன்னும் நேர்த்தியாக சொல்ல இயக்குனர் தவறிவிட்டதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது மட்டுமல்லாமல் படத்தின் கிளைமாக்ஸில் சொதப்பல் இருப்பதாகவும், பெரிய அளவில் ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைந்திருப்பதாகவும் ட்விட்டர் விமர்சனங்கள் கூறுகிறது. மேலும் இப்படத்தில் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சூரியின் நடிப்புதான் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?
இப்படத்தில் திரைக்கதை சில இடங்களில் சொதப்பினாலும் பெண்களுக்கு சமூகத்தில் ஏற்படும் அநியாயத்தை தட்டிக் கேட்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள கதையும் சிலரிடம் அப்பிளாஸ் வாங்கி வருகிறது. முக்கியமாக இப்படத்தில் சவுண்ட் இணைக்கப்படவில்லை. லைவ் மியூசிக்கல் படம் வித்தியாச அனுபவத்தை கொடுப்பதாகவும் கூறுகின்றனர்.
இன்னொருவர், காமெடி நடிகராக இருந்த சூரியன் இப்படத்தில் நடிப்பில் முதிர்ச்சி காட்டி இருக்கிறார். இன்னும் பத்து வருடம் கழித்து அவரை காமெடி நடிகர் எனக் கூறினால் யாரும் ஒப்புக் கொள்ளாத அளவு உயர்ந்து இருப்பார் எனவும் குறிப்பிட்டுள்ளார். கொட்டுக்காளிக்கு தொடர்ந்து கலவையான விமர்சனங்களை வருவது குறிப்பிடத்தக்கது.