Cinema News
கமலுக்கு மட்டும்தான் புரியும் போல!.. கொட்டுக்காளியை இப்படி பாராட்டிட்டாரே!…
kottukkaali movie: தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்த நடிகர் சூரி விடுதலை படம் மூலம் ஹீரோவாக மாறினார். அந்த படம் வெற்றியடையவே கருடன் என்கிற படத்தில் நடித்தார். அந்த படத்திலும் சூரிக்கு முக்கிய வேடம். வழக்கமான கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக நடிப்பதே அவருக்கு வெற்றியை தேடி தருகிறது.
இதை சூரியும் உணர்ந்திருக்கிறார். அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத்ராஜ் என்பவர் இயக்கியிருக்கும் கொட்டுக்காளி என்கிற படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ஏற்கனவே, சில திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்றிருக்கிறது.
இதையும் படிங்க: தளபதி சும்மா போகலை… கொடுத்த ஆர்டர் அப்படி.. அண்ணன் மேல பாசமெல்லாம் இல்லையோ…
விருது பெறும் திரைப்படங்கள் கமர்ஷியல் திரைப்படங்களாக இருக்காது என்பது பொதுவான கருத்து. கொட்டுக்காளியும் அப்படித்தான். ஆனால், விடுதலை, கருடன் என 2 ஹிட் படங்களை சூரி கொடுத்திருப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்காக ஒரு பிரத்யோக காட்சி திரையிடப்பட்டது.
இப்படத்தி பார்த்த வலைப்பேச்சி அந்தணன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் இவ்வளவு பில்டப் கொடுக்கும் படி படத்தில் ஒன்றுமில்லை. படத்தில் கதையே இல்லை. இயக்குனர் என்ன சொல்ல வருகிறார் என்பதே புரியவில்லை. படத்தின் இறுதிக்காட்சி முழுமையடையவில்லை. படம் பார்க்கும் நமக்கு குழப்பமே மிஞ்சுகிறது என அந்தணன் சொல்லியிருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதனோ படத்தை கிழித்து தொங்கவிட்டு விட்டார். சும்மா ஆட்டோவில் போவதையே காட்டி கொண்டிருக்கிறார்கள். ஒரு முழு படமாக கொட்டுக்காளி இல்லை. எல்லோரும் உச்சா போவதை படம் முழுக்க காட்டுகிறார்கள். இந்த படம் ஓடவே ஓடாது என போட்டு உடைத்தார்.
இந்நிலையில்தான் கமலுக்கு ஒரு பிரத்யோக காட்சியை திரையிட்டு காட்டியிருக்கிறது படக்குழுது. அப்போது, இயக்குனர் வினோத்ராஜ், சிவகார்த்திகேயன், சூரி என பலரும் இருந்தனர். படத்தை பார்த்த கமல் ‘ கொட்டுக்காளி படக்குழுவினர் அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதையை சொல்லியிருக்கிறார்கள். சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும், படைப்பாளிகளும் பல்கி விட்டார்கள்’ என பாராட்டி இருக்கிறார்.
ஒருவேளை இப்படம் கமலுக்கு மட்டும் புரியும் போல என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: எல்லாம் சூரி கால்ஷீட்டுக்காக!…கொட்டுக்காளி பாராட்டும் இயக்குனர்களை வெளுக்கும் பிரபலம்!..