சூரிக்கு இது ஒரு ஆடுகளம்!.. விருது நிச்சயம்!.. கொட்டுக்காளி டிரெய்லர் வீடியோ…

Published on: August 13, 2024
kottukkaali
---Advertisement---

Kottukkaali:தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து இப்போது ஹீரோவாக புரமோஷன் ஆகியிருப்பர் சூரி. அதேநேரம், ஹீரோ என்றதும் சந்தானத்தை போல் பில்டப் செய்து காட்சிகளில் நடிக்காமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில்தான் முதன் முதலில் கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார்.

அந்த படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்படி வெளியான விடுதலை படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. எனவே, தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ஒருபக்கம், துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் என்கிற படத்திலும் சூரி நடித்திருந்தார்.

நடிகர் சசிக்குமாரும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். கடந்த மே மாதம் வெளியான கருடன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது. எனவே, இனிமேல் காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என சூரி அறிவித்துவிட்டார்.

kottukkaali

இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ள கொட்டுக்காளி என்கிற படத்திலும் சூரி நடித்திருக்கிறார். ஒரு கிராமத்தில் நடக்கும் கதை இது. இந்த படத்தில் மலையாள நடிகை அன்னா பென் என்பவரும் நடித்திருக்கிறார். இந்த படம் வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் அள்ளியது.

இந்நிலையில்தான் இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதிக வசனங்கள் இல்லாமல் டிரெய்லர் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆடுகளம் படம் போல இந்த படத்திலும் கோழி சண்டை தொடார்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என நம்பப்படுகிறது.

இந்த டிரெய்லர் வீடியோ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லரை பார்க்கும்போது கண்டிப்பாக இப்படம் சூரிக்கு சில விருதுகளை பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது. இந்த திரைப்படம் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது.