More
Categories: Cinema News latest news

அவார்டு படம் எடுக்கணும்னு இப்படியா எடுப்பீங்க… கொட்டுக்காளியா… கொட்டும் காளியா?

கொட்டுக்காளி படத்தின் பிரஸ் ஷோ சமீபத்தில் போடப்பட்டது. பல பிரபலங்களும் படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் பிரபலமான ஒருவர் தான் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…

கொட்டுக்காளி படத்தைப் பொருத்தவரை பேய் ஓட்டறதுக்காக ஒரு பெண்ணை, அப்பா, அம்மா, முறை மாப்பிள்ளை பூசாரியிடம் அழைச்சிட்டுப் போறாங்க. போயிக்கிட்டே இருக்காங்க. போற இடத்தில் இயற்கை உபாதை வருது. மாதவிடாய் வருது. போற இடத்துல ஒரு பாடலை முணுமுணுக்கிறாள்.

Advertising
Advertising

அப்போ முறைப்பையன் அவளை அடிக்கிறான். சுற்றி உள்ள எல்லாரையும் அடிக்கிறான். அப்போ அந்தப் பெண்ணுக்கு ஒரு காதல் இருந்தது தெரிய வருது. அது என்ன ஏதுன்னுலாம் சொல்லல. அதை அவனால ஏத்துக்க முடியலையா? சாதி மறுப்பு காதலா? ஏழையா, பணக்காரனா எதுவும் சொல்லல.

அந்தக் காதலுக்கு எதிரா எல்லாரும் மாறிடுறாங்க. மொத்தத்துல அந்தப் பொண்ணு காதலை மறக்கணும். அதனால பூசாரிக்கிட்ட கூட்டிட்டுப் போறாங்க. 1மணி நேரம் 40 நிமிடம் ஓடுது. கடைசியா பூசாரியைப் பார்க்குறாங்க. அவர் பேயை ஓட்டுனாரா?

காதலை மறக்கச் செய்தாரா? எந்த மாதிரியான தில்லாலங்கடி வேலை செய்றாரு? கடைசியா சூரி என்ன செய்றாரு? இதெல்லாம் சொல்ல வேணாம். இதைக் கதையா கேட்கும்போது எப்படி இருக்கு? இதை ஏன் சுவாரசியமா சொல்லக்கூடாது. அவார்டா எடுக்கணும்னு இப்படியா பண்றது?

ஆடியன்ஸ்சுக்குப் பிடிக்கற மாதிரி கொஞ்சமாவது எடுக்க வேண்டாமா? எதை நோக்கிப் போகுதுன்னு பார்வையாளர்களுக்கு சலிப்பு உண்டாகுது. கூழாங்கல் படத்தைப் பலரும் புகழ்ந்து பேசுனதால இயக்குனருக்கு இன்னும் தற்பெருமை உண்டாகிடுச்சா? இருக்கலாம். அப்படி ஒரு முயற்சி.

vinothraj

இதுக்கு முழுக்க முழுக்க காரணம் சிவகார்த்திகேயன் தான். சிறுமி மாட்டைப் பிடித்து இழுத்துக் கொண்டு போகும் ஒரு காட்சி தான் பிரமாதம். மற்றபடி கொட்டுக்காளி கொட்டும் காளியாகுமா? பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பெர்லின் படவிழாவில் போய் கலக்கிய படம் கொட்டுக்காளி. கூழாங்கல் இயக்குனர் வினோத்ராஜ் தான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ சூரி, அன்னாபென் நடித்துள்ளனர். படத்திற்கு லைவ் சவுண்டு தான். படம் ஆக.23ம் தேதி திரைக்கு வருகிறது.

Published by
sankaran v