கணவர் உயிருடன் இருக்கும்போதே எம்.ஜி.ஆர் பட இயக்குனர் மீது ஆசைப்பட்ட நடிகை… என்ன நடந்தது தெரியுமா?
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் செந்தாமரை. இவர் எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் போன்ற பல டாப் நடிகர்களோடு பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக “தூரல் நின்னு போச்சு”, “மூன்று முகம்”, “தம்பிக்கு எந்த ஊரு” ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.
இவர் தனது இளம்வயதிலேயே எம்.ஜி.ஆர் நாடக மன்றத்தில் மிக முக்கியமான பொறுப்பில் இருந்தார். மேலும் பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் நாடகத் துறையில் இருந்தபோதே சக நடிகையான கௌசல்யாவை திருமணம் செய்துகொண்டார். கௌசல்யா செந்தாமரையும் பின்னாளில் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார்.
ஏ.சி.திருலோகச்சந்தர் மீது ஆசைப்பட்ட கௌசல்யா
“தங்கை”, “என் தம்பி”, “திருடன்”, “தெய்வ மகன்”, ‘பாரத விலாஸ்” போன்ற பல சிவாஜி கணேசன் திரைப்படங்களை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர். இவர் எம்.ஜி.ஆரை வைத்து “அன்பே வா” திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட செந்தாமரையின் மனைவியான கௌசல்யா செந்தாமரை ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
“திருலோகச்சந்தரை பார்க்க எனக்கு ஒரு ஆசை. அவருடைய நடை, பாவனை எல்லாவற்றையும் நான் ரசிப்பேன். நானும் என்னுடைய கணவரும் அவரது படப்பிடிப்புத் தளத்திற்கு சென்றிருந்தோம். அங்கே அவரை பார்த்து, ‘என்னைய கல்யாணம் பண்ணிக்கோங்க” என கூறினேன். அதற்கு அவர், ‘ஐயையோ புருஷனை வச்சிக்கிட்டு இப்படியெல்லாம் பேசுதே’ என்று பயந்துபோய் அங்கிருந்து ஓடியே போய்விட்டார்” என்று மிகவும் கலகலப்பாக கூறினார்.