அந்த ஹீரோவோட அப்பாதான் எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தார்! - கோவை சரளா சொன்ன ரகசியம்!...

by Rajkumar |   ( Updated:2023-03-22 07:31:34  )
kovai sarala
X

kovai sarala

சினிமாவில் கதாநாயகிகளை போலவே நகைச்சுவை நடிகர்களும் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவது சிரமமான விஷயமாகும். அப்படி இருந்தும் பல நகைச்சுவை நடிகர்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமாக இருந்துள்ளனர்.

பல வருடங்களாக மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நகைச்சுவை நடிகையில் முக்கியமானவர் நடிகை கோவை சரளா. தற்சமயம் அவர் நடிப்பில் வெளியான செம்பி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கோவை சரளா தெலுங்கு, தமிழ் இரண்டு சினிமாக்களிலுமே பிரபலமான நகைச்சுவை நடிகையாக இருந்தார்.

தமிழ் சினிமாவில் இருந்து ஒரு நகைச்சுவை நடிகை தெலுங்கு சினிமாவிற்கு போய் பிரபலமடைந்தார் என்றால் அது கோவை சரளாதான். தமிழ் சினிமாவில் வந்த காலம் முதலே பிரபலமான நடிகை என்றாலும் கோவை சரளா தெலுங்கிலும் பிரபலமாக வேண்டும் என ஆசைப்பட்டார்.

தெலுங்கில் கிடைத்த வாய்ப்பு:

1980 களிலேயே சினிமாவிற்கு வந்துவிட்டாலும் கூட 1990கள் வரை தெலுங்கு சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் 1996 ஆம் ஆண்டு கோவை சரளா நடித்து காலம் மாறி போச்சு திரைப்படம் வெளியானது. தமிழில் கோவை சரளாவிற்கு முக்கியமான படமாக இது அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதை தெலுங்கில் படமாக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. தெலுங்கில் கோவை சரளா கதாபாத்திரத்திற்கு ஆள் தேடி கொண்டிருக்கும்போது அப்போது எடிட்டராக பணிப்புரிந்த ஜெயம் ரவியின் தந்தையான எடிட்டர் மோகன் கோவை சரளாவை வைத்தே தெலுங்கிலும் நடிக்க வைக்கலாம் என பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து தெலுங்கில் கோவை சரளா அறிமுகமானார்.

அதற்கு பிறகு அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்தார்.

Next Story