விஜய் டிவி மூலம் பிரபலமான கேபிஒய் பாலா மீண்டும் ஒரு புதிய ஆம்புலன்ஸை மலை கிராம மக்களுக்கு பரிசாக வழங்கியிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தன்னிடம் இருக்கும் காசை அப்படியே தான தர்மம் செய்து வருகிறார் பாலா.
போகும் போது அரைஞான் கயிறை கூட அறுத்துவிடுகின்றனர் என விஜயகாந்த் பேசியது தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், சில நடிகர்கள் பல நூறு கோடிகள் சம்பாதித்தாலும், சில கோடிகளை கொடுத்து உதவி செய்யவோ ரசிகர்களை வந்து சந்திப்பதையோ தேவையற்ற வேலை என நினைத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த சான்ஸ் கிடைக்கிற வரைக்கும் இதை வச்சு உருட்ட வேண்டியதுதான்!.. சமந்தா நிலைமை இப்படி ஆகிடுச்சே?
ஏற்கனவே 3க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை வாங்கிக் கொடுத்த பாலா கூடிய சீக்கிரமே 10 ஆம்புலன்ஸ்களையாவது வாங்கித் தருவேன் எனக் கூறியிருந்தார். மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் என சுமார் 5 லட்சம் வரை செலவு செய்து நிதியுதவி வழங்கினார்.
இந்நிலையில், வாணியம்பாடி நெக்னாமலை பகுதியில் கர்ப்பிணி பெண் ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லாமல் டோலி வைத்து தூக்கிக் கொண்டு சென்றதை பேப்பரில் படித்தேன். அந்த கிராமத்துக்கு புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசாக வழங்குகிறேன் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிரம்மாண்ட இயக்குனருக்கே மறந்து போன கதை… சரியாக எடுத்து கொடுத்த ரஜினிகாந்த்… அதாம்லே சூப்பர்ஸ்டார்…
அதில், இப்படியே உதவி செய்து வந்தால் சிக்னலில் பிச்சை தான் எடுப்பன்னு சொல்றாங்க, நான் பிச்சை எடுக்கிற சிக்னலில் இந்த ஆம்புலன்ஸ் கிராஸ் ஆகி போனால் கூட சந்தோஷம் தான் என பாலா கூறியுள்ளார்.
உதவி செய்ய மனசும் வராதும், அடுத்தவர்கள் உதவி செய்வதை பார்த்து அரசியல் கட்சியில சேரப் போகிறாயா? உனக்கு கஷ்டம் வந்துடும் என நெகட்டிவாக பேசுபவர்கள் மத்தியில் பாலாவின் தொண்டு உள்ளம் நிச்சயம் அவரை காப்பாற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/C2upd4_x7hK/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…