என்ன ஆச்சு பாலாவுக்கு.. இப்போ தானே அவ்வளவோ உதவி செஞ்சாரு.. வைரலாகும் புகைப்படம்.!

KPY Bala: தமிழ் ரியாலிட்டி ஷோவான கலக்க போவது யாரு மூலம் ஹிட்டானவர் பாலா. இவரின் சமீபத்திய இன்ஸ்டா புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர். அப்படி என்னத்தான் ஆச்சு என அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பல கஷ்டங்களை தாண்டி கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் வென்றவர் பாலா. ஆனால் அதன் பின்னரும் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. அப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எண்ட்ரி கொடுத்தார். அங்கு தொடங்கியது அவரின் புகழ் வேட்டை.
இதையும் படிங்க: 18 முறை ரஜினியுடன் மோதிய கார்த்திக்!.. ஜெயித்தது சூப்பர் ஸ்டாரா?.. நவரச நாயகனா?!…
அக்மார்க் காமெடிக்காக ரசிக்கப்பட்டார். சினிமா வாய்ப்புகள் வந்தும் கூட குக் வித் கோமாளியில் தொடர்ந்தார். கடந்த சீசன் மட்டும் அவர் வரவில்லை. இது ஒரு புறமிக்க பாலாவின் உதவிக்கரத்தினை தெரியாதவர்களே இல்லை. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கொடுத்தார்.
தற்போது கூட சென்னை மிக்ஜாம் புயலில் கஷ்டப்படுபவர்களுக்கு 1000 என 200 குடும்பங்களுக்கு மேல் நேரில் போய் உதவி செய்து இருந்தார். அப்போது அவரிடம் கேட்ட போது சேர்த்து வச்சு என்ன செய்ய போறோம். இப்போது கூட சீட்டு போட்டத்தை எடுத்து வந்து தான் உதவி செய்வதாக கூறி இருந்தார்.
இதையும் படிங்க: அவ வீட்டுக்கு வரக்கூடாது! என்ன தாய்க்குலம் இப்படி சொல்லிடுச்சு – பொங்கி எழும் பூர்ணிமாவின் அம்மா