சொன்னது வேற! செஞ்சது வேற.. கேபிஒய் பாலாவை ஹீரோவாக களமிறக்கும் லாரன்ஸ்..

by Rohini |   ( Updated:2025-04-18 08:31:58  )
bala
X

bala

KPY Bala: கே பி ஒய் பாலாவை ஹீரோவாக களம் இறக்குகிறார் நடிகர் லாரன்ஸ். இது பற்றிய தகவல் தான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் ஒரு சாதாரண போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய நகைச்சுவையான காமெடியாலும் நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்தவர் கேபிஒய் பாலா.

தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கான ஒரு தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதன் மூலம் கிடைத்த வரவேற்பால் ஒரு சில படங்களில் துணை நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார் .ஒரு காமெடியனாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த சமூக சேவையாளர் என்பது அனைவருக்குமே தெரியும். அதுவும் வெள்ளம், புயல் காலத்தில் மக்களுக்காக ஓடி ஓடி உழைத்தவர்களில் பாலாவை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.

அப்போது மட்டுமல்ல இப்பொழுதும் இன்றுவரை கூட யாருக்கு என்ன வேண்டுமானாலும் தன்னால் முடிந்த அளவு உதவி செய்பவராக இருந்து வருகிறார் பாலா. ஏற்கனவே இந்த மாதிரி சமூக சேவை எண்ணம் கொண்ட நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் லாரன்ஸ் .அதனால் லாரன்ஸும் பாலாவும் சேர்ந்து ஏராளமான பேருக்கு இணைந்து உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் பாலாவை என்னுடைய படத்தில் நான் அறிமுகம் செய்வேன் என ஒரு சமயம் லாரன்ஸ் கூறியிருந்தார். இப்போது வேறொரு தயாரிப்பாளர் தயாரிக்கும் படத்தில் பாலாவை ஹீரோவாக களம் இறக்குகிறார் லாரன்ஸ் .இந்த படத்தை ஷெரிஃப் என்பவர் இயக்க விவேக் மெர்வின் படத்திற்கு இசையமைக்க இருக்கிறாராம்.

இதைப்பற்றி லாரன்ஸ் கூறும்போது தான் தயாரிக்கும் படத்தில் தான் பாலாவை அறிமுகம் செய்யலாம் என நினைத்திருந்தேன் .ஆனால் இப்போது நல்ல கதையுடன் வேறொரு தயாரிப்பாளர் கிடைத்துள்ளதால் பாலா இந்த படத்தில் ஹீரோவாக களம் இறங்குகிறார் என தெரிவிக்கிறார் லாரன்ஸ் .விஜய் டிவியில் இருந்து சந்தானம், சிவகார்த்திகேயன் என அடுத்தடுத்து நடிகர்கள் உருவான நிலையில் இப்போது பாலாவும் அவர்கள் மாதிரி ஜொலிப்பாரா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Next Story