Connect with us

Cinema News

தக்க சமயத்தில் விஜே பிரியங்கா செய்த உதவி!.. பாலா வாழ்க்கையை மாற்றிய அந்த தருணம்…

KPY Bala: சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிஸியாக இருக்கும் கேபிஒய் பாலா தொடர்ந்து நிறைய பேருக்கு உதவிகளை குவித்து வருகிறார். இதற்கு அவரின் வாழ்க்கையில் நடந்த சில ஸ்பெஷல் தருணங்கள் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் டிவி கேபிஒய் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. ஆனால் அந்த நிகழ்ச்சி கொடுத்த பிரபலத்தை விட சமீபத்திய காலமாக அவர் செய்யும் உதவிகள் அவருக்கு வேறு விதமான புகழை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு கொடுத்த தொகை, மருத்துவமனைக்கு கொடுத்த ஆம்புலன்ஸ், பங்க் ஊழியருக்கு கொடுத்த பைக் என பாலா செய்த உதவிகள் எக்கச்சக்கமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதையும் படிங்க: விஜயகாந்துக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த ராவுத்தர்!… சிகிச்சையே வேண்டாமென கோமோவிற்கு சென்ற சோகம்!

கல்லூரியில் பிஏ படித்துக் கொண்டிருந்த பாலா அந்த சமயத்தில்தான் கலக்கப்போவது யாரு ஷூட்டிங் கலந்து கொள்கிறார்.  நிறைய பதட்டம் முதல் எபிசோட் ஒழுங்காக செய்தாலும் இரண்டாவது எபிசோடில் திக்கி நின்று விடுகிறாராம். அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது என அவர் நினைத்திருக்கிறார்.

ஆனால் விஜே பிரியங்கா நடுவர்களிடமே சென்று பாலா முதல் எபிசோட் நன்றாக தானே செய்தான் அவனுக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என பெரிய அளவில் பேசி மீண்டும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அந்த ஷூட்டிங் சமயத்தில் பாலாவுக்கு ஒரு விபத்து நடந்து காலில் தையல் போடப்பட்டு இருக்கிறது.

தையல் போட்ட முதல் நாளிலே ஷூட்டிங் இருக்கு வந்தவர் மீண்டும் வண்டியில் செல்ல முடியாமல் திணறி இருக்கிறார். பைக்கில் சென்றாலே ஐம்பது ரூபாய் தான் ஆகும். ஆனால் தினமும் அவருக்கு 500 ரூபாயை கொடுத்து காரில் சென்று வரச் சொல்லி இருக்கிறார் அமுதவாணனின் மனைவி. நிறைய ஷோக்களை வாங்கி கொடுத்து இருக்கிறார் அமுதவாணன். அவர்கள் செய்த உதவிக்கான நன்றி கடனை தான் தற்போது உதவிகளாக நான் செய்து வருகிறேன் என்கிறார் பாலா.

இதையும் படிங்க: சத்தியராஜ் நடித்து வெளிவராத திரைப்படங்களின் லிஸ்ட்!.. அட இவ்வளவு படமா?!…

கேபிஒய் சமயத்தில் ஒரு பெண் மேற்படிப்பு படிக்க காசு இல்ல உதவி கிடைச்சா நல்லா இருக்கும் என பாலாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட பாலா இன்னும் ஒரே மாதம் எனக்கு நேரம் கொடு என சொல்லி அவரின் கல்லூரி கட்டணத்தை சேர்த்து கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் பாலாவின் ஒருநாள் சம்பளம் 5 ஆயிரத்துக்குள் தான் இருக்கும் என கூறப்படுகிறது. 

இப்படி பாலா தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருக்க அவர் பெற்றோர்களிடம் சிலர் இப்படியே போனா உங்களுக்கு என்ன இருக்கும் என கேட்கின்றனர்.  அதற்கு பாலாவின் அப்பாவும் அம்மாவும் அவன் எந்த கெட்ட பழக்கத்துக்கு இந்த செலவு செய்யவில்லையே? உதவி தானே செய்கிறான். அவன் செஞ்சா எல்லாம் சரியா இருக்கும் என பாலாவிற்கு துணை நின்றனர்.  அங்கு தொடங்கிய அவர் இன்று பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை தொடர்ச்சியாக செய்து கொண்டே இருக்கிறார்.

இதையும் படிங்க: முடக்கப்பட்ட டிவிகே ஆப்… விஜய் தன்னுடைய அரசியல் கட்சிக்கு போட்ட திடீர் முடிவு…

google news
Continue Reading

More in Cinema News

To Top