ரஜினி படத்தில் நானும் இருக்கேன்… குஷியில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த குக் வித் கோமாளி பிரபலம்…
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ரஜினிகாந்த்துடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவ ராஜ்குமார், சுனில், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான நகைச்சுவை கலைஞர் ஒருவர் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் தான் நடித்த அனுபவங்கள் குறித்து மிகவும் உற்சாகத்துடன் தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளர் அவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு சீசன் 6” நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அறியப்பட்டவர் பாலா. ஆதலால் இவரை “KPY” பாலா என அழைப்பார்கள். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானார். இவரின் டைமிங் காமெடியை ரசிக்காதவர்களே இல்லை என கூறலாம். இவரது நகைச்சுவைக்கென்றே தனி ரசிகர் கூட்டமும் உள்ளது.
இந்த நிலையில் கே பி ஒய் பாலா, “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்துள்ளாராம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் தான் நடித்த அனுபவத்தை குறித்து அவர் பகிர்ந்திருந்த பேட்டியில்…
“நெல்சன் சார் என்னை தொடர்புகொண்டு பேசினார். நான் நடிப்பதாக இருந்த காட்சியையும் விவரித்தார். 17 நாட்கள் நான் நடிக்கவேண்டிய காட்சி படமாக்கப்படும் என கூறினார். அந்த 17 நாட்களும் ரஜினியுடன் நான் இருப்பது போன்ற காட்சிதான் படமாக்கப்படும் எனவும் கூறினார். நானும் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என பாலா மிகவும் உற்சாகத்தோடு பகிர்ந்துகொண்டார்.
இதையும் படிங்க: ஏகே 62 திரைப்படத்தை அவரும் இயக்கவில்லையாம்!! அப்போ யார் இயக்கப்போறான்னு தெரியுமா?..
மேலும் பேசிய அவர் “படத்தில் காட்டப்படும் ஜெயிலில் 20 செல்கள் இருக்கும். ரஜினிகாந்த் மாஸாக ‘ஐ அம் எ ஜெயிலர்’ என வசனம் பேசும்போது நீங்க 17 ஆவது செல்லில் பாத்ரூம் போய்க்கொண்டிருப்பீங்க. இதுதான் சீன், இதை 17 நாளும் பண்ணனும் என கூப்பிட்டாங்க. நானும் பண்ணிருக்கேன். திரையரங்கில் நீங்கள் இதை பார்க்கலாம்” என மிகவும் கலகப்பாக கூறியிருந்தார்.