More
Categories: Cinema News latest news television

KPY பாலா செய்யும் உதவியால் அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை… ஆனா இப்படி ஆகும்னு நினைக்கலையே!

KPY Bala: சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டு பிரபலமான பாலாவுக்கு பெரிய புகழ் கிடைக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ச்சியாக செய்து வரும் உதவிகள் வேறு மாதிரியான புகழை பெற்று தந்தது. அது தற்போது பாலா வாழ்க்கைக்கே பிரச்னையை கொடுத்து இருக்கிறது.

கலக்க போவது யாரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி கோப்பையை தட்டியவர் பாலா. ஒல்லியான தேகம், வித்தியாசமான ஹேர்கட் என பாலாவை பலருக்கு ஓகேவாக தான் பிடித்து இருந்தது. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் போட்ட காமெடிகள் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தினை பாலாவுக்கு உருவாக்கி தந்தது.

இதையும் படிங்க: வந்துட்டான்யா.. வந்துட்டான்யா.. வடிவேலு – பார்த்திபன் காம்போவில் பட்டையைக் கிளப்பிய படங்கள்!..

ஆனால் பாலாவின் லெவலை அதிகமாக உயர்த்தியது அவர் தொடர்ந்து செய்து வரும் உதவிகள் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறந்த கோமாளியாக அவர் வந்த போதே கொடுத்த ஒரு லட்ச ரூபாயை இயலாத பிள்ளைகளின் படிப்புக்கு செலவு செய்ய போகிறேன் என ஆச்சரியம் அளிக்கும் விதமாக தெரிவித்து இருப்பார்.

அதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கொடுத்தது. சென்னை மழையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த 200 குடும்பங்களுக்கு மேல் ஆயிரம் ரூபாய் கொடுத்தது. சமீபத்தில் கூட பெட்ரோல் பங்கில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு இளைஞன் வண்டி வாங்க முடியாமல் கஷ்டப்படுவதாக சொல்லிய வீடியோ வைரலான நிலையில் அவருக்கு புது வண்டியை பாலா பரிசாக அளித்தார்.

இதையும் படிங்க: அந்த வடிவேலு படத்தில் நடிக்க வேண்டியது விஜயா?!.. படம் வேறலெவலா இருந்திருக்குமே!…

இப்படி தொடர்ச்சியாக நல்லது செய்து வரும் பாலாவிற்கு இந்த உதவிகளை ஒரு சில சங்கடங்களையும் கொடுத்து வருகிறதாம். நடிகர்கள் இருக்கும் வரை சம்பாதித்துக் கொண்டால்தான், முடியாமல் போனால் உதவிக்கு யாருமே வரமாட்டார்கள் என பாலாவின் பெற்றோரிடம் உறவினர்கள் தொடர்ந்து புகார் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் பாலா சில வருடங்களாக காதலித்து வரும் பெண் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு தற்போது மறுப்பு தெரிவித்துவிட்டனராம்.  நடிகராக அவர் சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் இப்படி உதவிகளாக செய்து விடுவதால் மனைவி, மக்களை நாளை அவர் எப்ப பார்த்து கொள்வார் எனவும் கேள்விகள்  எழுந்துள்ளதாம். தற்போது தன் காதலி குடும்பத்தினை சமாதானம் செய்யும் முயற்சியில் பாலா இருப்பதாக கூறப்படுகிறது.

Published by
Akhilan