ஃப்ளைட், கப்பல்னு சொகுசு வாழ்க்கை.. அப்போதைய நடிகைகளில் ஒரு கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை

KR Vijaya: தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் நடிகை கே.ஆர்.விஜயா.1963 ஆம் ஆண்டு வெளியான கற்பகம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான கே.ஆர்.விஜயா முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை காட்டினார். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்திற்கு பிறகு சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி என முன்னனி நடிகர்களுடன் ஜோடி சேரும் வாய்ப்பும் அவருக்கு குறுகிய காலத்தில் கிடைத்தது.

மூன்று தலைமுறைகளாக நடித்து வரும் கே. ஆர்.விஜயா தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 60 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் கே. ஆர்.விஜயா. ஒரே வருடத்தில் 10 படங்களில் நடிக்கக் கூடிய அளவுக்கு அவ்வளவு பிஸியாக இருந்தார்.

இதையும் படிங்க: இந்த பாட்டாவது தேறுமா?!.. வெளியானது கோட் பட செகண்ட் சிங்கிள் அப்டேட்!..

மேலும் அப்போதைய காலகட்ட நடிகைகளில் முதன் முதலில் ஒரு கோடி சம்பளம் பெற்ற நடிகையாகவும் கே.ஆர்.விஜயா இருந்தார். 1966 ஆம் ஆண்டு ஒரு பெரிய தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அதிலிருந்தே சொகுசு வாழ்க்கை, பங்களா என வசதியாக வாழ்ந்தார் கே.ஆர். விஜயா. படப்பிடிப்பிற்கு வரும் போதே ஃபிளைட்டில் தான் வருவாராம்.

சொந்தமாக ஒரு தனி விமானம் 5 சொகுசு கப்பல்கள் வைத்திருந்த நடிகையாகவும் அந்த காலத்தில் இருந்தவர் கே.ஆர். விஜயா என அவருடைய சகோதரியும் நடிகையுமான வத்சலா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் இத்தனை சொத்துக்களையும் வசதியையும் இழந்து கே.ஆர். விஜயா சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருக்கிறார் என்றும்.

இதையும் படிங்க: பேரைக் கேட்டதுமே ஆடிப்போன கமல்!.. தயாரிப்பாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்..

அவர் இறந்து விட்டார் என்றும் ஒரு சமயம் பல வதந்திகள் வந்தன. ஆனால் அது எல்லாமே பொய் என்றும் வெறும் வதந்திதான் என்றும் கே.ஆர்.விஜயாவின் சகோதரி வத்சலா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

 

Related Articles

Next Story