More
Categories: Cinema History Cinema News latest news

கே.ஆர்.விஜயா தயாரித்த படத்தில் ரஜினிகாந்தை சிபாரிசு செய்த சிவாஜி கணேசன்.. என்ன படம் தெரியுமா?

Sivaji Ganesan: இப்போ உள்ள நடிகர்கள் மாதிரி இல்லை. 80ஸ் களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் வளர்ந்ததுக்கு அவர்களுக்கு முந்தையை தலைமுறையான சிவாஜி, எம்.ஜி.ஆர் தான் காரணமாக இருப்பார்கள். அப்படி ஒரு சம்பவம் குறித்த தகவல் தான் வெளியாகி இருக்கிறது.

பெரும்பாலும் நடிகர்கள், நடிகைகள் நடித்து கொண்டு இருக்கும் போதே தயாரிப்பு ஆசை வரும். அப்படி பழம்பெரும் நடிகையாக கே.ஆர்.விஜயாவுக்கு வந்து இருக்கிறது. உடனே கதை கேட்டு நான் வாழ வைப்பேன் படத்தினை ஓகே செய்து விட்டார். படத்தின் இயக்குனராக யோகநாதன் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ப்ரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் படத்தின் கதை தானா..? இது அது இல்ல..! கலாய்க்கும் ரசிகர்கள்..!

படத்தின் பாடல்களை இசையமைத்தது இளையராஜா. ஹீரோவாக சிவாஜியும், ஹீரோயினாக கே.ஆர்.விஜயாவும் நடிக்க இருந்தனர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தினை யார் போடலாம் என்ற பேச்சு வார்த்தை வந்தது. அது ஹீரோவுக்கு இணையான பாத்திரம் என்பதால் அதிக பேச்சுகள் போனதாம்.

உடனே சிவாஜி அந்த கதாபாத்திரத்துக்கு ரஜினிகாந்த் தான் சரியாக இருப்பார் என சிபாரிசு செய்கிறார். படக்குழுவுக்கும் அந்த ஐடியா சரியாகப்பட ஓகே சொல்லி விடுகின்றனர். படப்பிடிப்பு தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. 

ரஜினிகாந்த் நடித்த ஒரு காட்சியை பார்த்து சிவாஜிக்கே ஆச்சரியமாகி விட்டதாம்.

இதையும் படிங்க: என்னங்கப்பா எல்லாரும் இங்கையே தங்கிட்டீங்க.. அனிருத் லிஸ்ட்டில் அடுத்த வருடம் இத்தனை படங்களா..?

உடனே சிவாஜி அதுக்கென்ன? அவன் ஒரு நிமிட காட்சி கூட கட் ஆக கூடாது. வளர ஆரம்பிச்சி இருக்கான். அப்படியே வெளியிடுங்கள் என்றாராம். அவர் பேச்சை கேட்டு இயக்குனரும் அப்படியே ரிலீஸ் செய்ய நான் வாழ வைப்பேன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan