மணிவண்ணனுக்கு அது சுத்தமா வராது!...சீக்ரெட்டை உடைத்த பிரபல இயக்குனர்...

by Akhilan |
மணிவண்ணனுக்கு அது சுத்தமா வராது!...சீக்ரெட்டை உடைத்த பிரபல இயக்குனர்...
X

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சிஷ்யரான கே.ரங்கராஜ் 80களில் தலைசிறந்த இயக்குனராக வலம்வந்தவர். தனது படங்களில் பல முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து வெற்றி கண்டவர். இவரின் பல படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்து இருக்கிறார்.

பாரதிராஜாவின் உதவி இயக்குனராக இருந்த கே ரங்கராஜ் டெக்னிக்கல் மன்னன் என்று பாரதிராஜாவே பாராட்டும் அளவுக்கு முக்கியமானவர். இவரின் திரை வாழ்வு குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் தனது சக உதவி இயக்குனரான மணிவண்ணன் குறித்து தெரிவித்து இருக்கிறார்.

அதில், நான், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா எல்லாரும் இயக்குனரானதுக்கு காரணமே பாரதிராஜா தான். அவர் கால்ஷூட் தான் கிடைக்கவில்லை. அவரின் உதவி இயக்குனரையாவது புக் செய்யுங்கள் என சிலர் நினைத்ததால் தான் நாங்கள் இங்கு இருக்கிறோம். இல்லை என்றால் எங்களுக்கு யார் நேரடியாக இயக்குனர் வாய்ப்பு கொடுப்பார்கள்.

நாங்க நாலுப்பேருமே மிகவும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தோம். ஒருத்தருக்கு ஒருத்தர் அத்தனை உதவியாக இருந்தோம். ஒருமுறை கல்லுக்குள் ஈரம் படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருந்தது. ஒரு வாரத்திற்கான ரிப்போர்ட் தவறுதலாக தண்ணிரீல் அடித்து சென்றுவிட்டது. அது எடிட்டிங்கில் பிரச்சனையாக அமையுமா என பயந்தேன். ஆனால் சித்ராவும், மணிவண்ணனும் பெரிதும் மெனக்கெட்டு எடிட்டிங்கில் உதவினர். எனக்காக அதை பிரச்சனையாகாமல் பார்த்துக்கொண்டனர்.

மணிவண்ணன் மாதிரி ஒருவரை பார்க்கவே முடியாது. அவர் பல காலம் ஆனாலும் பெயர் சொல்லும் வசனத்தை ஸ்கிரிப்ட்டில் எழுதியே பழக்கம் இல்லாதவர். வாயில் சொல்லுவதையே வழக்கமாக வைத்து இருந்தார். நான் 40 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். அவர் மாதிரி ஒருவரை இன்றும் பார்க்கவில்லை. இன்று பலரும் ஒரு சினிமாக் காட்சியை முன்பே வடிவமைத்து கொண்டு செல்கின்றனர். ஆனால் மணிவண்ணன் ஒரு டயலாக்கை கூட அந்த இடத்தில் முடிவு எடுக்கும் திறன் கொண்டவர் எனப் புகழாரம் சூட்டி இருக்கிறார்.

Next Story