More
Categories: Cinema History Cinema News latest news

வார்னிங் கொடுத்த சிவாஜி… கோபப்பட்ட இயக்குனர்.. கடைசில தோல்வியை சந்திச்சதுதான் மிச்சம்…

தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலைகழகமாக கருதப்படுபவர் நடிகர் திலகம் சிவாஜி. ஆரம்பத்தில் நாடக நடிகராய் இருந்த சிவாஜிக்கு பராசக்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாய் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. ஏற்கனவே நாடகங்களில் பணியாற்றிய அனுபவத்தினால் இப்படத்தில் தனது வசனங்களை மிகச்சிறப்பாக வெளிகாட்டியிருந்தார்.

சினிமாவில் எந்தவொரு நடிகரானாலும் அவர்கள் தனக்கு முன்னோடியாக நினைப்பது நடிகர் திலகத்தையே. அந்த அளவு தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கட்டி போட்டவர் சிவாஜி கணேசன். சாவித்ரி, பத்மினி என அனைத்து நடிகைகளுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க: சிவாஜி அப்படி சொன்னதை மறக்கவே மாட்டேன்!. யார் அப்படி சொல்லுவா?!. உருகிய தேங்காய் சீனிவாசன்.

பலவித குணச்சித்திர வேடங்களில் நடித்த சிவாஜி கணேசன் அந்த கால நடிகர்களுடன் மட்டுமல்லாமல் இந்த கால நடிகர்களுடனும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முரளி, விஜய், ரஜினி என அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இவர் நடித்த கர்ணன், பாசமலர், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பல திரைப்படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் தெய்வபிறவி. இப்படத்தை இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர். மேலும் இப்படத்தை தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் தயாரித்திருந்தார். சிவாஜியின் சினிமா வரலாற்றில் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இதையும் வாசிங்க: சிவாஜியுடன் போட்டி போட்ட சிவக்குமார்!.. நடிகர் திலகம் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?…

இப்படத்தில் பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான வாய்ப்பு ஏவிஎம் நிறுவனத்திற்கு வந்துள்ளது. அப்போது சிவாஜி கணேசனிடம் அதை பற்றி சரவணன் கூறியுள்ளார். அதற்கு சிவாஜி பத்மினி, நான், எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்தது போன்று யாருமே நடிக்க மாட்டார்கள் எனவும் நாங்கள் போட்டி போட்டு நடித்ததால்தான் அப்படம் வெற்றி பெற்றது எனவும் கூறியுள்ளார். அதனால் அப்படத்தை ஹிந்தியில் தயாரிக்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

இதை கேட்டு இயக்குனருக்கும் கோபம் வந்துள்ளது. பின்னர் சிவாஜியின் பேச்சை மீறி அப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளனர். ஹிந்தியிலும் கிருஷ்ணன் – பஞ்சுவே இயக்கினர். பிந்தியா எனும் பெயரில் வந்த அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. பின்னர் சிவாஜியில் கணிப்பு சரிதான் என சரவணன் தானே ஒரு பேட்டியில் ஒத்து கொண்டாராம்.

இதையும் வாசிங்க: முதல் நாள் படப்பிடிப்பு.. தடுமாறிய சிவாஜி ராவ்!.. அபூர்வ ராகங்கள் படத்தில் நடந்த சுவாரஸ்யங்கள்!…

Published by
amutha raja

Recent Posts