சமூக வலைத்தளங்களின் வளர்ச்சியின் காரணமாக கதாநாயகிகளுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்குதான் அதிகமான வரவேற்பு இருந்து வரும்.
ஆனால் இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக ஊடகங்கள் வந்த பிறகு கதாநாயகிகளுக்கு தங்களது பதிவுகளை இடுவதன் மூலம் தொடர்ந்து ரசிகர்கள்கள் மத்தியில் தங்கள் வரவேற்பு குறையாமல் பார்த்துக்கொள்கின்றனர்.
இதையும் படிங்க:முதல் படத்தையே முடிக்க முடியாமல் கஷ்டப்பட்ட இயக்குனர்!.. கை கொடுத்த இளையராஜா!.. என்ன மனுசன்யா!.
இந்த நிலையில் தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற நடிகையாக நடிகை க்ரீத்தி ஷெட்டி இருக்கிறார். மலையாள திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான க்ரீத்தி ஷெட்டி ஒரு சில படங்களிலேயே சினிமாவில் பிரபலமாகிவிட்டார்.

ரீ எண்ட்ரி கொடுக்கும் கதாநாயகி:
அவர் நடித்த ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் தமிழில் டப்பிங் செய்து வெளியானது. அந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிலும் கூட க்ரீத்தி ஷெட்டிக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெளியான வாரியர் திரைப்படமானது தென்னிந்திய அளவில் அவருக்கு ரசிக பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இதையும் படிங்க:நான் செஞ்ச வேலையால் அண்ணாவும், அப்பாவும் வீட்டை விட்டே போயிட்டாங்க!.. நளினி வாழ்வில் இவ்வளவு சோகமா!..
அதனை தொடர்ந்து தமிழில் வணங்கான் திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆனார் க்ரீத்தி ஷெட்டி. ஆனால் அந்த படத்தில் பாதியிலேயே விலகிவிட்டார் நடிகர் சூர்யா. அதற்கு பிறகு படத்தில் இருந்து க்ரீத்தி ஷெட்டியையும் நீக்கி விட்டனர்.

இந்த நிலையில் க்ரீத்தி ஷெட்டி தற்சமயம் மீண்டும் ஜெயம் ரவி படம் வழியாக தமிழ் சினிமாவிற்கு வருவதாக பேச்சுக்கள் உள்ளன. மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்த புவனேஷ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். க்ரீத்தி ஷெட்டிக்கு தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:அஞ்சலியின் மயக்கத்தில் ஆட்டம் போட்ட ஹீரோ!..படாத பாடு படுத்திய அந்த நடிகர்!..
