Connect with us
saravana store

18 வயசுலயே சோலோ ஹீரோயினா? பொறாமையில் சக நடிகைகள்……

krithi shetty

Cinema News

18 வயசுலயே சோலோ ஹீரோயினா? பொறாமையில் சக நடிகைகள்……

சினி உலகை பொருத்தவரை நடிகையோ நடிகரோ யாராக இருந்தாலும் தங்களுக்கென ஒரு அடையாளமோ அங்கீகாரமோ கிடைப்பதற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். சிலருக்கு அதற்கான பலன் மிகவும் தாமதமாக கிடைக்கும். சிலருக்கு உடனே கிடைத்துவிடும். அப்படி தான் ஒரு இளம் நடிகைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

இவர் தற்போது தான் திரையுலகில் நுழைந்துள்ளார். இவர் நடிப்பில் ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது. தற்போது இரண்டாவது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முன்றாவது படமே நடிகைக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. அந்த நடிகை வேற யாரும் இல்லைங்க.

krithi shetty

krithi shetty

நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்து மிரட்டிய உப்பென்னா படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை கீர்த்தி ஷெட்டி தான். இப்படத்தில் அறிமுகமாகும் போது கீர்த்தி ஷெட்டிக்கு 17 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உப்பென்னா படம் தெலுங்கில் மாபெரும் ஹிட் கொடுத்தது.

முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை சம்பாதித்த கீர்த்திக்கு தனி ஆர்மியே உருவாக்கி விட்டார்கள் என்றால் பார்த்துக்கோங்க. தற்போது கீர்த்தி ஷெட்டி பிரபல இயக்குனர் லிங்குசாமி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கீர்த்தி ஷெட்டி புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதுவும் சாதாரணமாக இல்லைங்க சோலோ ஹீரோயினா நடிக்க உள்ளாராம்.

keerthi shetty

keerthi shetty

அதன்படி கீர்த்தி ஷெட்டி தற்போது தெலுங்கு இயக்குனர் விரிஞ்சி வர்மா அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 18 வயது இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி இவ்வளவு குறுகிய காலத்திலேயே சோலோ ஹீரோயினாக நடிக்க இருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா சமந்தா போன்ற டாப் நடிகைகளே பல ஆண்டுகள் கழித்து தான் சோலோ நாயகியாக நடிக்க தொடங்கினார்கள். ஆனால் கீர்த்தி ஷெட்டி கெரியரை தொடங்கிய உடனே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதால் சக நடிகைகள் பொறாமையில் உள்ளார்களாம்.

Continue Reading
To Top