வெறியேத்துறதே உனக்கு வேலையா போச்சி!. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் கீர்த்தி ஷெட்டி...

விஜய் சேதுபதி தெலுங்கில் அறிமுகமான உப்பண்ணா படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் கீர்த்தி ஷெட்டி. மும்பையில் பிறந்து வளர்ந்த கன்னடத்து பைங்கிளி இவர். துறுதுறு நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார். முதல் படமே வெற்றி என்பதால் தொடர் வாய்ப்புகள் வந்தது.
நானி ஹீரோவாக நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படத்தில் நடித்தார். அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்த இவர் லிங்குசாமி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் இயக்கிய தி வாரியர் படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த படம் சரியாக ஓடவில்லை. அதேபோல், வெங்கட்பிரபு இயக்கிய கஸ்டடி என்கிற படத்திலும் நடித்திருந்தார்.
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து உருவான வணங்கான் படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமானது இவர்தான். ஆனால், ஷுட்டிங் துவங்க நேரமானதால் அந்த படத்திலிருந்து விலகினார். இப்போது கார்த்தி நடிக்கும் வா வாத்தியார், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பிரதீப் நடித்து வரும் எல்.ஐ.சி, ஜெயம் ரவி நடித்து வரும் ஜெனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் வெளியானபின் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என எந்த மொழியாக இருந்தாலும் நடிக்க தயாராக இருக்கும் நடிகை இவர். எப்படியாவது எல்லா மொழியிலும் மார்க்கெட்டை பிடிப்பதற்காக கிளாமராக உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் கூட்டமும் உண்டு.
இந்நிலையில், சைனிங் உடம்பை காட்டி கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை பெற்று வருகிறது.