சினிமாவே வேணாம்!.. பிளாஸ்டிக் கடை போடப்போன கே.எஸ்.ரவிக்குமார்!.. அப்புறம் நடந்துதான் டிவிஸ்ட்!..
90களில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் புரியாத புதிர். திரில்லர் படமாக இப்படம் வெளிவந்தது. ஆனால், சேரன் பாண்டியன் போன்ற படங்களை இயக்கி பிரபலமானார். நாட்டாமை, நட்புக்காக, முத்து, படையப்பா போன்ற படங்கள் மூலம் முன்னணி இயக்குனராக மாறினார்.
கமலை வைத்து தெனாலி, பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, தசாவதாரம் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். மேலும் தெலுங்கில் பாலைய்யா, கன்னடத்தில் சுதீப் என பல மொழிகளிலும் முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியுள்ளார். படங்களை இயக்கியதோடு பல படங்களிலிலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: பாட்ஷாவில் போட்ட சபதத்தை பாபாவில் நிறைவேற்றிய பிரபலம்… அப்படி என்னதான் நடந்தது?
இயக்குனராவதற்கு முன் ஈ ராமதாஸ், ராமராஜன், ரங்கராஜ் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக வேலை செய்திருக்கிறார். ஆனால், அவர் வேலை செய்த பெரும்பாலான படங்கள் பாதியிலேயே நின்றுவிட்டது. அதனால் வெறுத்துப்போன ரவிக்குமார் ஒருகட்டத்தில் சினிமாவே வேண்டாம் என நினைத்து ஒரு பிளாஸ்டிக் கடையை வைப்பது என முடிவெடுத்தார். அப்பாவிடம் பணம் வாங்கி அதற்கான வேலையை துவங்கிவிட்டார்.
கடையை திறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு அவருடன் பணிபுரிந்த ராஜேந்திரகுமார் என்பவர் அவரை பார்க்க வந்தார். ‘என்னுடைய நண்பர் சுப்பிரமணி சூப்பர் குட் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தில் படம் இயக்க போகிறான். அவனுடன் இந்த படத்தில் நீ வேலை செய்ய வேண்டும் என்பது என் ஆசை’ என சொல்ல, கே.எஸ்.ரவிக்குமாரோ தயங்கினார்.
இதையும் படிங்க: மலையாள நடிகையை ஷூட்டிங்கில் அடித்த இயக்குனர் பாலா… என்னங்கையா இன்னுமா நீங்க மாறல?
‘என் அம்மாவிடம் போய் பேசு. அவர் சொன்னால் கடையை திறக்கும் முடிவை விட்டுவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வருகிறேன்’ என சொல்ல ராஜேந்திரகுமார் அவரின் அம்மாவிடம் பேசி சம்மதம் வாங்கினார். அப்படி கே.எஸ்.ரவிக்குமார் வேலை செய்த திரைப்படம்தான் புது வசந்தம். அந்த சுப்பிரமணியன்தான் இயக்குனர் விக்ரமன்.
அதன்பின் அதே சூப்பர் ஹிட் பிலிம்ஸ் நிறுவனம் ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில் தனது முதல் படமான ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கினார் கே.எஸ்.ரவிக்குமார். அதுமட்டுமல்ல அதே நிறுவனத்தில் பல படங்களையும் இயக்கியிருக்கிறார். மேலும், ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படமெடுத்தார். அன்று மட்டும் அவரின் நண்பர் அவரை போய் சந்திக்கவில்லை எனில் பிளாஷ்டிக் கடை முதலாளியாக மாறி இருப்பார். இப்படித்தான் சில சந்திப்புகள் பலரின் வாழ்க்கையையே மாற்றுவிடும்.