ரஜினி படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் வேண்டும்... அடம் பிடித்த இயக்குனர்... இந்த கூட்டணியின் முதல் படம் எப்படி இருந்தது தெரியுமா?
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் நாயகன் அவர் படத்தில் இருந்தாலே போதும் பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட் என ஆணித்தரமான ஒரு நம்பிக்கை நம்மில் பலரிடம் இருக்கிறது. ஆனால் இதே ஏ.ஆர்.ரஹ்மானை முதன்முதலாக ரஜினி நடிப்பில் முத்து படத்தில் ஒப்பந்தம் செய்யும் போது மொத்த படக்குழுவினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்:
இயக்குனர் மணிரத்னம் தனது ரோஜா படத்தில் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்தார். இது அப்போதைய சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இளையராஜாவை ஒதுக்கிவிட்டு ஒரு இளைஞரை ஒப்பந்தம் செய்ததால் படம் சரியாக வராது என மணிரத்னத்தின் காதுப்படவே பலரும் கிசுகிசுத்தனர்.
ரோஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது சினிமா உலகமே கலந்து கொண்டனர். அங்கு பேசிய ரோஜா படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் இமயம் கே பாலசந்தர், ஏ.ஆர்.ரஹ்மானை மேடையில் அழைத்தார். மிக அற்புதமான இசை கலைஞரை மணிரத்னம் கண்டுபிடித்திருக்கிறார். இத்தனை நாள் இவர் எங்கு இருந்தார்? என்று தெரியவில்லை. யார் கண்ணுக்கும் சிக்கவில்லை? எனக் கூறி இருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகவும் இருக்கிறது.
ரோஜா தேசியவிருது:
ஆனால் அவர்களின் கூற்றுக்கு எதிராக ரோஜா படத்தின் பாடல்கள் டாப் ஹிட் அடித்தது. அதுமட்டுமல்லாமல் அந்த படத்திற்கு அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதற்கு உதவியவர் இயக்குனர் பாலுமகேந்திரா தான். இளையராஜாவின் மிக நெருங்கிய நண்பர் என்றாலும் அவர் கலைஞனின் உழைப்புக்கு மரியாதை கொடுத்தாராம். தேசிய விருது குழு தலைவரான அவர் இளையராஜாவுடன் கடைசி சுற்றில் போட்டிக்கு நின்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கே தனது ஓட்டினை செலுத்தினார்.
அது புகழ்பெற்ற இளையராஜாவிற்கு போட்டியாக 21 வயது பையன் நிற்கிறான். இவனுக்கு இந்த தேசிய விருது மிகப்பெரிய தொடக்கத்தை கொடுக்கும் எனக் கூறி இருந்தாராம். இதை தொடர்ந்து மணிரத்னத்துடனான இவரின் பயணம் ரோஜாவில் துவங்கி தற்போது பொன்னியின் செல்வன் வரை நீண்டுக்கொண்டே தான் இருக்கிறது.
அடம் பிடித்த கே.எஸ்.ரவிக்குமார்:
இதைப்போல தான் ரஜினியின் நடிப்பில் உருவான முத்து படத்திற்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பாளராக யாரை போடலாம் என யோசித்து வந்தார். அவருக்கு முதல் சாய்ஸாக வந்தது ஏ.ஆர்.ரஹ்மான் தான். உடனே அவரை அழைத்து படத்திற்கு ஒப்பந்தமும் போட்டு விட்டார்.
ஆனால் ரோஜா படத்தினை போல இங்கையும் ஒரு குழுவினர் இவரை ஏன் இந்த படத்தில் போட்டீர்கள் என சர்ச்சை செய்தனர். அந்த நேரத்தில் ரஜினியின் மார்க்கெட் பீக்கில் இருந்தது. இவரால் மொத்த படமும் நாசமாகிவிடும் எனக்கூட ரவிக்குமாரை கரைக்க பார்த்தனர். ஆனால் அவர் தன் முடிவில் தெளிவாக இருந்தார். இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதை உறுதியாகிவிட்டார். இதை தொடர்ந்து அப்படத்தின் பாடல்களுக்கே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து, படையப்பா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் மீண்டும் கூட்டணி போட்டார். அப்படத்தில் ரஜினிக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கு போட்ட பிஜிஎம்களே சொல்லும் ஆஸ்கார் நாயகன் யார் என்று. ஒரு நொடி யோசித்தால் கூட போதும் நம் தலையில் தானாக அந்த இசை வந்தமர்ந்து விடும் தானே.