வேற யாரையாவது வச்சி படம் எடுத்துக்கோ!.. சிம்புவிடம் கடுப்பான கே.எஸ்.ரவிக்குமார்…
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவின் கம்மெர்சியல் இயக்குனர்களில் முன்னணியாக திகழ்பவர். இவரது திரைப்படங்கள் அனைத்தும் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என கலந்துகட்டிய திரைப்படங்களாகவே இருக்கும். ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
லேட்டாக வந்த சிம்பு
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சிம்புவுடன் பணியாற்றியபோது நடந்த ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் “சரவணா”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டு நாட்கள், சிம்பு காலை 7 மணி படப்பிடிப்பிற்கு 11 மணிக்கு வந்தாராம். மூன்றாவது நாள் சிம்புவை அழைத்த ரவிக்குமார், “நான் இந்த படத்தில் இருந்து விலகிவிடுகிறேன். நீ வேறு யாரையாவதை வைத்து படத்தை இயக்கிக்கொள். நான் தயாரிப்பாளரிடம் கூறி விலகிவிடுகிறேன்” என கூறியிருக்கிறார்.
லெஃப்ட் ரைட் வாங்கிய இயக்குனர்
இதனை கேட்ட சிம்பு, “சார் ஏன் சார் இப்படி சொல்றீங்க?” என கேட்க, “நான் 7 மணியில் இருந்து உனக்காக ஷாட் வச்சிட்டு காத்துட்டு இருக்கேன். ஆனா நீ 11 மணிக்கு வருகிறாய். நீ 11 மணிக்குத்தான் வருவாய் என்றால் என்னிடம் முதலில் கூறிவிடு. நான் அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்கிறேன். இந்த படத்தை நான் மிக விரைவில் முடித்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என கூறினாராம்.
அதன் பிறகு சிம்பு, அடுத்த நாளில் இருந்து தான் படப்பிடிப்பிற்கு வரும் நேரத்தை ரவிக்குமாரிடம் கூறிவிடுவாராம். அதற்கேற்ப கே.எஸ்.ரவிக்குமார் திட்டமிட்டுக்கொள்வாராம்.
கே.எஸ்.ரவிக்குமார் அஜித்தை வைத்து இயக்கிய “வரலாறு” திரைப்பட படப்பிடிப்பின் பாதியில் ஒரு சிக்கல் ஏற்பட, அந்த இடைவெளியில்தான் “சரவணா” படத்தை இயக்கியிருக்கிறார். ஆதலால்தான் இத்திரைப்படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாராம் அவர்.