அஜித் சொல்லி கேட்டாங்களா? நீங்க யார் அத சொல்ல? கமலை கேள்வி கேட்ட கே.எஸ்.ரவிக்குமார்

kamal_ajith
Kamal: தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அடுத்த படியாக நடிப்பில் ஒரு மாபெரும் கலைஞனாக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். நடிப்பில் சிவாஜியின் அடுத்த வாரிசுதான் கமல். எந்தளவுக்கு சிவாஜியின் படங்களை பார்த்து 80களில் நடிகர்கள் உருவாகினார்களோ அதை போல் கமலின் படங்களை பார்த்து இன்று ஏராளமான நடிகர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினி, விஜய் இவர்களை போல் கமலுக்கு பெரிய அளவில் மாஸ் இல்லையென்றாலும் அவருடைய நடிப்புதான் இன்று பலபேருக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கின்றது.
கமலின் ஒவ்வொரு படங்களுமே புது புது பரிணாமத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கின்றது. புதுமையான முயற்சிகளை கமல் எடுத்துக் கொண்டே இருக்கிறார். தொழில் நுட்பத்தில் என்ன டெக்னாலஜி புதியதாக வந்தாலும் அதை உடனே சினிமாவில் புகுத்த வேண்டும் என்ற முயற்சியில் கமல் இறங்குகிறார். அதற்கேற்ற வகையில் இன்று எத்தனையோ டெக்னாலஜி வந்திருந்தாலும் அதற்கு அடிக்கல் போட்டவர் கமலாகத்தான் இருப்பார்.
நேற்று சென்னயில் கிரேஸி மோகனின் 25 புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கமல் முக்கிய சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கே.எஸ்.ரவிக்குமார் கமலை பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.ஏற்கனவே கமல் தனக்கு கொடுக்கப்பட்ட உலகநாயகன் பட்டம் இனி வேண்டாம். கமல் என்றே அழைத்தால் போதும் என தெரிவித்திருந்தார்.
இதை பற்றி பேசிய கே.எஸ். ரவிக்குமார் ‘அஜித் இனிமே தல என்று கூப்பிட வேண்டாம். அஜித்குமார் என்றே கூப்பிடுங்கள் என்று சொன்னதில் இருந்தே அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் தல என்றேதான் கூப்பிட்டு வருகிறார்கள். அதை மாற்ற முடியாது. அப்படித்தான் உங்களுக்கும். நீங்க யார் சார் அத சொல்ல. நீங்கள் உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என்று சொன்னாலும் நாங்கல் அப்படித்தான் அழைப்போம்’

‘இது ஒரு தலை காதல் போல. உங்களுக்கு அதில் விருப்பம் இல்லை என்றாலும் நாங்கள் அப்படித்தான் கூப்பிடுவோம். இதில் மணிரத்னம் இன்னும் ஒரு படி மேலாக விண்வெளி நாயகன் என்று வைத்துவிட்டார். இதற்கு மேல் எந்த பட்டமும் இல்லை. பத்மஸ்ரீ, பத்மபூஷன் என ஆயிரம் பட்டம் இருந்தாலும் அது எல்லாராலும் பெற்றுவிட முடியும். ஆனால் இந்த மாதிரி பட்டம் தனித்துவமானது’ என கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.