Connect with us

Cinema News

சரத்குமாருக்கு “நோ” சொன்ன கே எஸ் ரவிக்குமார்.. உள்ளே புகுந்து வரலாறு படைத்த விக்ரமன்..

சரத்குமார், தேவயானி ஆகியோரின் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் ஆன திரைப்படம் “சூர்ய வம்சம்”. இப்போதும் இத்திரைப்படம் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவது உண்டு. அந்த அளவுக்கு கல்ட் சினிமாவாக வெற்றி பெற்ற “சூர்ய வம்சம்” திரைப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இத்திரைப்படம் குறித்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் விக்ரமன். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரியிடம் சரத்குமாரின் கால்ஷீட் இருந்திருக்கிறது. சௌத்ரி கே எஸ் ரவிக்குமாரை அழைத்து சரத்குமாரை வைத்து ஒரு படம் இயக்கச்சொல்லி கேட்டிருக்கிறார்.

கே எஸ் ரவிக்குமாருக்கு அந்த நேரத்தில் தான் கமல்ஹாசனை வைத்து “அவ்வை சண்முகி” திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. ஆதலால் சரத்குமாரை வைத்து இயக்கமுடியவில்லை. இதனை தொடர்ந்து ஆர் பி சௌத்ரி இயக்குனர் விக்ரமனை தொலைப்பேசியில் அழைத்திருக்கிறார். விக்ரமன் மற்றொரு கம்பெனியில் சரத்குமாரை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக கூறியிருக்கிறார்.

உடனே அவரை தனது அலுவலகத்திற்கு அழைத்த சௌத்ரி, “என்னிடம் சரத்குமாரின் கால் ஷீட் இருக்கிறது. நீங்கள் மற்றொரு கம்பெனியில் சரத்குமாரை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக கூறினீர்களே, அதற்கு முன்பே சரத்குமார் எனக்கு கால் ஷீட் கொடுத்துவிட்டார். அது வீணாகப்போக நான் விரும்பவில்லை. ஆதலால் நீங்கள் சரத்குமாரை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவேண்டும்” என கூறியிருக்கிறார்.

அதற்கு ஒப்புக்கொண்ட விக்ரமன், “வானத்தைப் போல” திரைப்படத்தின் சாயலில் ஒரு கதையை கூறியிருக்கிறார். இதற்கு சரத்குமாரும் சௌத்ரியும் ஓகே என தலையாட்ட, அதன் பின் விக்ரமன் இது சரத்குமாருக்கு சரிவராது என யோசித்திருக்கிறார். அதன் பின்பு தான் “சூர்ய வம்சம்” கதையை எழுதினாராம்.

“சூர்ய வம்சம்” கதைக்கு சரத்குமாரும் சௌத்ரியும் டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்கள். இதன் பின்பு தான் “சூர்ய வம்சம்” என்ற தமிழின் சிறந்த திரைப்படம் உருவானது. அன்று கே எஸ் ரவிக்குமார் தவறவிட்ட ஒரு வாய்ப்பை, சிறப்பாக பயன்படுத்தி ஒரு கல்ட் சினிமாவாக அதனை உருவாக்கியது விக்ரமனின் சாமர்த்தியம் என்றுதான் கூறவேண்டும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top