கே.எஸ்.ரவிக்குமாரை பொறுக்கினு சொன்ன மூத்த நடிகர்...! சூட்டிங்கில் நடந்த காரசாரம்..
சிவாஜி, ரஜினி, கமல் தொடங்கி இன்று உச்ச நட்சத்திரங்களை நாட்டாமையாக்கி சிவகார்த்திகேயன், தனுஷ் இவர்களோடு நட்பு சேர்ந்து நடிக்கவும் செய்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். க்ளாசிக்கான படங்களை எடுத்து குடும்பத்திலுள்ள அத்தனை உறுப்பினர்களையும் ரசிக்க வைத்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவரின் ஒவ்வொரு படங்களும் குடும்பபாங்கான படங்களாக இருக்கும். நாட்டாமை, அவ்வைசண்முகி, படையப்பா, பிஸ்தா, வரலாறு, பஞ்சதந்திரம் என இவரின் அனைத்து படங்களிலும் நகைச்சுவை மிகுந்து ஒரு குடும்பபடமாக இருக்கும்.
சிவாஜியுடன் படையப்பா படம் எடுக்கும் பொழுது ஒரு சீனில் ஐயர்கள் அடிவாங்குவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். ஐயர்களுக்கு கம்பெனி ஆர்டிட் களை செட் பண்ணியுள்ளார் இயக்குனர். அவர்களை அடிப்பதை பார்த்த சிவாஜி ரஜினியிடம் என்னப்பா ஐயர போட்டு அடிக்கான் ? சுத்த பொறுக்கியாக இருக்கானே என்று கேட்டுள்ளாராம்.
சிவாஜிக்கு ஐயர் வேடம் போட்டவர்கள் கம்பெனி ஆர்டிஸ்ட்னு தெரியாதாம் இதை ஒரு மேடையில் கே.எஸ்.ரவிக்குமாரே சொல்லி சிரித்தார்.