சிம்புவை இப்படி கையாளனும்...! இயக்குனர்களுக்கு டிப்ஸ் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார்..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் சிம்பு பத்து தல என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏற்கெனவே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து பட ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
சினிமாவில் சிம்புவின் மேல் உள்ள பெரிய குற்றச்சாட்டே அவர் நேரத்திற்கு சூட்டிங் வரமாட்டார். அவர் இஷ்டத்துக்கு தான் வருவார் என்பது. இதனாலயே பல பட வாய்ப்புகள் அவரை விட்டு சென்றது. இயக்குனர்களும் அவருக்கு பயந்து அவரை தேடி போவதை நிறுத்திக் கொண்டனர். இதனாலயே நடிப்புக்கும் அவருக்கும் கொஞ்சம் இடைவேளி வந்தது.
மாநாடு படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் நல்ல ஒரு ரீஎன்ரி கொடுத்தார் சிம்பு. இந்த நிலையில் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அண்மையில் சிம்புவை பற்றி ஒரு செய்தியை கூறினார். ஏற்கெனவெ சிம்புவை வைத்து சரவணா என்ற படத்தை எடுத்தார் ரவிக்குமார். அந்த பட சூட்டிங்கின் போது சிம்பு தாமதமாக தான் வருவாராம். ரவிக்குமார் காலையிலயே வந்து உட்கார்ந்து ஒட்டு மொத்த படக்குழுவும் சிம்புவுக்காக காத்திருக்குமாம்.
இதனால் கடுப்பாகி போன ரவிக்குமார் சிம்புவிடம் நான் இந்த படத்தில் இருந்து விலகிக்கிறேன் என கூற பயந்து போன சிம்பு காரணம் கேட்டாராம். ரவிக்குமார் உடனே சிம்புவிடம் உனக்கு எப்பொழுது சூட்டிங் வர முடியுமோ முன்னதாக சொன்னால் அதற்கேற்றாற் போல் நாங்களும் அந்த நேரத்தில் வந்து விடுவோம். வர முடியவில்லை என்றாலும் சொல்லிவிடு. வேறு காட்சிகள் எடுப்போம். உன் இஷ்டத்துக்கு வருவது படத்தோட வெற்றிக்கு நல்லது இல்லை என கூற அதிலிருந்து சிம்பு நேரத்திற்கு வந்து விடுவாராம். இதை கூறும் போது ரவிக்குமார் எப்பொழுதும் சிம்புவையே குறை கூறுவது சரியில்லை. அதற்கேற்ப நாம் நடந்து கொண்டால் எல்லாம் சரியாக அமைந்து விடும் என கூறினார்.