சிவாஜிக்கு பயந்து ரஜினியும் கே.எஸ்.ரவிக்குமாரும் செஞ்ச வேலை!.. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்...

பராசக்தி படம் மூலம் அறிமுகமாகி பல வேடங்களிலும் நடித்து நடிப்பில் நவரசத்தையும் காட்டி நடிகர் திலகமாக மாறியவர் சிவாஜி கணேசன். இவர் போடாத வேஷமே இல்லை என சொல்லும் அளவுக்கு பல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். சரித்திர கதைகளின் கதாநாயகர்கள், கடவுளின் அவதாரங்கள், சுதந்திர போரட்ட தியாகிகள், சமானிய மனிதர் என நடிப்பில் வெரைட்டி காட்டியவர். இவருக்கு பின்னால் நடிக்க வந்தவர்களுக்கு நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர்.

sivaji

sivaji

ரஜினியுடன் இவர் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார். படிக்காதவன், விடுதலை, படையப்பா ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளார். இதில் படையப்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் 1999ம் வருடம் வெளியானது.

padayappa

கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால்,சிவாஜி படப்பிடிப்பில் இருந்தால் அவரால் படப்பிடிப்பில் சிகரெட் குடிக்க முடியவில்லை. எனவே, தனி அறைக்கு சென்று லைட்டையெல்லாம் அணைத்துவிட்டு இருட்டில் நின்று சிகரெட் குடிப்பாராம். பார்த்தாலும் அது யாரென தெரியாது. அப்படி ஒருநாள் அவர் அந்த அறைக்கு சென்றபோது அறை முழுவதும் சிகரெட் புகையாக இருந்தது.

padayappa

அங்கே ஒருவர் புகையை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டிருந்தார். அருகில் சென்று கே.எஸ்.ரவிக்குமார் அவரின் தோளில் கை வைக்க திரும்பி பார்த்தவர் ரஜினி. கே.எஸ்.ரவிக்குமாருக்கு இன்ப அதிர்ச்சி. ‘சிவாஜி சார் அங்கிருக்கும்போது சிகரெட் குடிக்க முடியாது. அதனால்தான் இங்கே வந்தேன்’ என ரஜினி அசட்டு சிரிப்புடன் வழிய, தனக்கு கம்பெனி கிடைத்துவிட்டது என கே.எஸ்.ரவிக்குமாரும் அவருடன் சேர்ந்து சிரித்தாராம்.

 

Related Articles

Next Story