ராசி இல்லாதவன் என முத்திரைக் குத்தப்பட்ட உதவி இயக்குனர்… பின்னாளில் தமிழ்நாடே கொண்டாடிய இயக்குனர்!...

by Arun Prasad |   ( Updated:2023-04-03 06:42:30  )
KS Ravikumar
X

KS Ravikumar

தமிழ் சினிமா அறிவியலை அடிப்படையாக வைத்து இயங்கும் ஒரு துறை என்றாலும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் பலருக்கும் ராசி, ஜாதகம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை உண்டு. அதனால்தான் ஒரு திரைப்படத்தை தொடங்குவதற்கு முன்பு ஒரு நல்ல நேரம் பார்த்து பூஜை போட்டு தொடங்குகிறார்கள். சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக இந்த பழக்கம் உண்டு.

ஆனால் இந்த நம்பிக்கைகளே பலருக்கும் எமனாக வந்துவிடுவது உண்டு. அப்படி ஒரு நிகழ்வுதான் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு நடந்திருக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் தொடக்கத்தில் ஈ.ராமதாஸ், நாகேஷ், விக்ரமன் போன்ற பலரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் ஒரு ராசியில்லாத உதவி இயக்குனர் என்று பெயர் பெற்றிருந்தாராம். இது குறித்து தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்.

ராசியில்லாத உதவி இயக்குனர்

“நான் எந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினாலும் அத்திரைப்படங்கள் வெளிவராமல் இருந்தன. நான் ஒரு Anti-Centiment ஆன ஒரு உதவி இயக்குனர். இதுதான் எனக்கு அப்போது பெயராக இருந்தது. நடிகர் சார்லி அப்போது எனக்கு நெருக்கமாக இருந்தார்.

அவர் என்னிடம் எப்போதும் சொல்வார். ஒரு படத்தில் உதவி இயக்குனர் என்று எனது பெயர் வந்துவிட்டால் என்னிடம் ‘முதலிலேயே சம்பளம் வாங்கிவிடு. எப்படியும் இந்த படம் ரிலீஸ் ஆவாது. ரிலீஸ் ஆனாலும் ஓடாது’ என கிண்டல் செய்வார். எனினும் பின்னாளில் நான் வேலை செய்த படங்கள் வெளிவந்தது” என அப்பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.

Next Story