சரத்குமாருக்கும், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் வெடித்த மிகப்பெரிய சண்டை… அதுக்கு காரணம் இது தான்… இதெல்லாம் ஓவருல!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி கூட்டணிகளில் ஒன்று தான் சரத்குமார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் உடையது. அவர்கள் இருவரும் இணைந்து எடுத்த எந்த படமும் பெரிய தோல்வியை கொடுக்கவில்லை. கிட்டத்தட்ட ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது.
இருவரும் முதன்முதலாக இணைந்து நடித்த படம் என்றால் அது புரியாத புதிர் தான். அப்போது சரத்குமார் வில்லனாக பிஸியாக நடித்து கொண்டிருந்த சமயம். அந்த படத்திற்கு கிட்டத்தட்ட 6 நாட்கள் தான் கால்ஷூட் கேட்டு இருக்கிறார் ரவிக்குமார்.
இதையும் படிங்க: இவங்களாலதான் ‘கைதி’ படமே மிஸ் ஆச்சு! மனம் திறந்த மன்சூர் அலிகான்
சரத்குமாரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டு அட்வான்ஸ் வாங்கிவிட்டாராம். ஆனால் அவருக்கு இடையில் விபத்து ஏற்பட்டு படுக்கைக்கு சென்று விட்டார். அப்போது கூட ரவிக்குமார் எனக்கு வில்லன் இவர் தான் எனக்கூறி படத்தில் அவர் கேரக்டருக்கும் டூப் போட்டு படப்பிடிப்பினை நடத்தி இருக்கிறார்.
கிட்டத்தட்ட படம் முடியும் சமயத்தில் தான் சரத்குமாருக்கு உடல் தேறி படப்பிடிப்புக்கு வருவதாக இருந்து இருக்கிறார். மாலை 6 மணிக்கு ஷூட்டிங் வர வேண்டிய சரத்குமார் மற்ற வேலைகளில் பிஸியாக நள்ளிரவு 2 மணிக்கு வந்திருக்கிறார். இதனால் ரவிக்குமாருக்கு கோவம் தலைக்கேறி படப்பிடிப்பிலேயே சண்டை முற்றி விட்டதாம்.
இதையும் படிங்க: சூர்யா – ஜோதிகாவின் திருமணத்தினை தடுத்து நிறுத்தினேனா? இதுதான் நடந்தது ? மனம் திறந்த சிவக்குமார்..
சரத்குமாரும், ரவிக்குமாருடன் சண்டைக்கு நிற்க ஷூட்டிங்கில் ஒரே பரபரப்பு நிலவி இருக்கிறது. ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக ஒரு பேட்டியில் ரவிக்குமார் மனம் திறந்து இருக்கிறார். அந்த சண்டையில் தான் இருவரும் மேலும் நட்பு வலுவானதாக தெரிவித்தார்.