என் படத்துக்கு பொண்ணுங்களே வரமாட்டாங்க… ஓப்பனாக சொன்ன கே.எஸ்.ரவிக்குமார்… ஏன் தெரியுமா?
கே.எஸ்.ரவிக்குமார் தொடக்கத்தில் பாரதிராஜா, விக்ரமன் ஆகிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனரான ஆர்.பி.சௌத்ரி கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து “டர்கா” என்ற கன்னட திரைப்படத்தை தமிழுக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்துத்தரச் சொன்னாராம். கே.எஸ்.ரவிக்குமாரும் மிகச் சிறப்பாக அதை எழுதி கொண்டு சென்றிருக்கிறார்.
அதன் பின் “நீதான் டைக்டர்” என்று கூறியிருக்கிறார் ஆர்.பி.சௌத்ரி. இப்படித்தான் “புரியாத புதிர்” திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு வந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கே.எஸ்.ரவிக்குமார் “புரியாத புதிர்” திரைப்படத்தை குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது ‘புரியாத புதிர்” திரைப்படம் உருவாவதற்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார்,ஆர்.பி.சௌத்ரியிடம் “இந்த படம் நான் டைரக்ட் பண்ணல சார்” என கூறினாராம். அதற்கு சௌத்ரி “ஏன்?” என்று கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் “படத்தின் ஸ்கிரிப்ட் அருமையாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த படம் பெரிதாக ஓடாது. இது சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படம். ரிபீட்டட் ஆடியன்ஸ் வரமாட்டார்கள். சஸ்பென்ஸ் தெரிந்துவிட்டால் ஆடியன்ஸுக்கு ஆர்வம் இல்லாமல் போய்விடும். இது போன்ற படங்களுக்கு பெண்கள் வரமாட்டார்கள். ஆண்கள் மட்டுமே பார்க்ககூடிய திரைப்படமாகத்தான் இது இருக்கும்” என கூறினாராம்.
இதனை கேட்டுக்கொண்டிருந்த ஆர்.பி.சௌத்ரி, “எல்லாத்துக்கும் பிடிக்கிற மாதிரி படம் எடுத்துக்கொடுய்யா, அடுத்த படம் உனக்கே தருகிறேன்” என கூறி கே.எஸ்.ரவிக்குமாரை சம்மதிக்க வைத்தாராம். எனினும் “புரியாத புதிர்” திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க: படப்பிடிப்பில் ஹீரோவை பைத்தியம் போல புலம்பவிட்ட அஜித் பட இயக்குனர்… உங்க ரவுசுக்கு ஒரு அளவே இல்லையா!!