நடிகர் கமல்ஹாசனும், ரஜினியும் எப்படிப்பட்ட நண்பர்கள் என்பது ரசிகர்களுக்கு புரியும். சினிமா உலகில் 2 நடிகர்கள் ஈகோ இன்றி 45 வருடங்களுக்கும் மேல் நட்பாக பழகி வருகிறார்கள் எனில் அது ரஜினி – கமல் மட்டுமே. ரஜினி சினிமாவில் அறிமுகமானபோது கமல்ஹாசன் பெரிய ஸ்டாராக இருந்தார். இருவரின் குருவே பாலச்சந்தர்தான்.
இருவரையும் தனது படங்களில் நடிக்க வைத்தார் பாலச்சந்தர். மூன்று முடிச்சி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் இனிமேல் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என இருவரும் பேசி முடிவெடுத்து தனித்தனியாக நடிக்க துவங்கினார்கள்.
இதையும் படிங்க: சூப்பர் ஹிட் அடித்த சூரியின் கருடன்!.. சந்தானத்தை கழுவி ஊற்றும் ஃபேன்ஸ்.. வேறலெவல் மீம் பாருங்கோ!..
கமல் காதல் மன்னனாகவும், ரஜினி வசூல் மன்னனாகவும் மாறினார்கள். ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. 40 வருடங்களாக அவர்கள் இணைந்து நடிக்கவில்லை. கடைசியாக 1983ம் வருடம் வெளிவந்த ‘உருவங்கள் மாறலாம்’ படத்தில் இருவரும் நடித்திருந்தனர். அதோடு சரி.
40 வருடங்களாக இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவருக்குள்ளும் நல்ல நட்பும், அன்பும் எப்போதும் இருக்கிறது. இப்போதும் ரஜினி பிரமிப்புடன் பார்க்கும் நடிகராக கமல்ஹாசன் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கமலின் ரசிகராகவே ரஜினி இருக்கிறார். கமல் நடிக்கும் படங்களை உடனே பார்த்துவிட்டு பாராட்டும் பழக்கம் கொண்டவர் ரஜினி.
இதையும் படிங்க: என்ன மனுஷன்யா? விஜய்கிட்ட இருந்து கண்டிப்பா இத கத்துக்கனும்.. மைக் மோகனா சொன்னது?
இந்நிலையில், கமல், ரஜினி என இருவரையும் வைத்து திரைப்படங்களை இயக்கிய கே.எஸ்.ரவிக்குமார் ஊடகம் ஒன்றில் முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். ‘கமலால் மருதநாயகம் படத்தை எடுக்க முடியாமல் போனது. அந்த படத்தை தொடர்ந்து எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை. அதன்பின், கமல் என்னை அழைத்து ‘நான் ஹே ராம் என்கிற படத்தை தயாரித்து, இயக்கவுள்ளேன்’. அதன்பின் ஒரு படத்தில் நடிக்கப்போகிறேன். நீங்களே இயக்குங்கள் என சொன்னார்.
ஹே ராம் படத்திற்கு பின் தயாரிப்பாளர்கள் யாரும் கமலை வைத்து படமெடுக்க சம்மதிக்கவில்லை. எனவே, ‘நீங்களே என்னை வைத்து படம் தயாரியுங்கள். உங்கள் அலுவகத்திலேயே வந்து தங்கி கொள்கிறேன்’ என சொன்னார். எனக்கோ தயக்கமாக இருந்தது. ரஜினி சாரை சந்தித்தபோது இதை அவரிடம் சொன்னேன். ‘முதல்ல போய் அவருக்கு அட்வான்ஸ் கொடுங்க’ என சொல்லி அவர்தான் என்னை உற்சாகப்படுத்தி நம்பிக்கை கொடுத்தார். அதன்பின்னரே கமல் சாரை வைத்து ‘தெனாலி’ படத்தை தயாரித்து இயக்கினேன்’ என ரவிக்குமார் சொல்லி இருக்கிறார்.