டைரக்டர் யார் என்றே தெரியாமல் கதை எழுதிய கே.எஸ்.ரவிக்குமார்… ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்டு!
தமிழ் சினிமாவின் கம்மெர்சியல் இயக்குனர்களில் முன்னணியாக திகழ்ந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். “சேரன் பாண்டியன்”, “நாட்டாமை”, “முத்து”, “அவ்வை சண்முகி”, “பஞ்ச தந்திரம்”, படையப்பா”, ‘தசாவதாரம்” போன்ற தமிழின் மிக முக்கிய வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் இவர்.
கே.எஸ்.ரவிக்குமார் தொடக்கத்தில் விக்ரமன், ஈ.ராமதாஸ், நாகேஷ் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் தமிழில் “புரியாத புதிர்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படம் 1990 ஆம் ஆண்டு வெளியானது. ஆர்.பி.சௌத்ரி இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
இதில் ரஹ்மான், ரகுவரன், சரத்குமார், ஆனந்த் பாபு, ரேகா ஆகிய பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மாபெறும் வெற்றியடைந்தது. தனது முதல் திரைப்படத்திலேயே வெற்றி இயக்குனர் என்ற பெயரை பெற்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
இந்த நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் தான் இயக்கிய முதல் திரைப்படமான “புரியாத புதிர்” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஒரு நாள் ஆர்.பி.சௌத்ரி, கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்து “என்னுடைய கெஸ்ட் ஹவுஸில் ஒரு கன்னட திரைப்படம் இருக்கிறது. அதனை போய் பார்த்துவிட்டு வா” என்று கூறினாராம். கே.எஸ்.ரவிக்குமாரும் அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்து “படம் ரொம்ப போர் அடிக்குது” என கூறியிருக்கிறார்.
“போர் அடிக்காதவாறு இந்த படத்தின் திரைக்கதையை எழுதிக்கொண்டு வா” என கூறியிருக்கிறார் சௌத்ரி. அதன் பின் சில நாட்களிலேயே கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதையை எழுதி தந்திருக்கிறார்.
அந்த கன்னட படத்தில் சண்டைக் காட்சிகள் எதுவும் இருக்காதாம். ஆனால் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஸ்கிரிப்ட்டில் சண்டை காட்சிகள் பலவற்றை இணைத்து எழுதியிருக்கிறார். அதே போல் பல காமெடி காட்சிகளையும் 5 பாடல் காட்சிகளையும் அதில் எழுதியிருந்தாராம்.
அந்த ஸ்கிரிப்ட்டை படித்து பார்த்த ஆர்.பி.சௌத்ரி, “அந்த படத்தில் இல்லாத பலவற்றை இதில் சேர்த்திருக்கிறாய். மிகப் பெரிய படமாக வந்துவிடுமே” என கூறியிருக்கிறார். அதற்கு கே.எஸ்.ரவிக்குமார், “படத்தை 2.30 மணி நேரத்திற்குள் இயக்குனர் எடுத்துவிடுவார்” என்று கூறியிருக்கிறார்.
அதன் பின் சௌத்ரி, “நான் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரை வரச்சொல்கிறேன். அவரிடம் 5 ட்யூன்கள் நன்றாக இருக்கிறது” என கூறியிருக்கிறார். அதற்கு ரவிக்குமார் “அதை ஏன் நான் பார்க்க வேண்டும். அதெல்லாம் டைரக்டர் பார்த்துக்கொள்வார்” என கூறிருக்கிறார். உடனே ஆர்.பி.சௌத்ரி “நீதான்யா இந்த படத்துக்கு டைரக்டர்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாராம். இதனை கேட்ட ரவிக்குமார் அப்படியே ஷாக் ஆகிவிட்டாராம். இவ்வாறுதான் “புரியாத புதிர்” திரைப்படம் கே.எஸ்.ரவிக்குமாரின் கைக்கு வந்திருக்கிறது.
இதையும் படிங்க: தனுஷ் பட டைட்டிலை விஜய் படத்திற்கு வைத்த லோகேஷ் கனகராஜ்… இப்படியெல்லாம் நடந்திருக்கா?