அனுதாப ஓட்டுகளை வளைத்துப்போட நினைத்த டி.ராஜேந்தர்… பங்கமாய் கலாய்த்து தள்ளிய கே.எஸ்.ரவிக்குமார்…
கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் “வாரிசு” திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்களிடையே மிகவும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக இணையத்தில் ரசிகர்கள் பலரும் சீரியல் போல் இருப்பதாக கூறி கேலி செய்து வந்தனர்.
இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இயக்குனரான வம்சி பைடிப்பள்ளி ஒரு பேட்டியில் “நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். ஆனால் நீங்கள் சீரியல் என்று கிண்டல் செய்கிறீர்கள். விஜய், பாடல் காட்சிகளுக்காக மிகக்கடுமையாக ரிகர்சல் செய்தார். மிகவும் கஷ்டப்பட்டார்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், தனது பேட்டி ஒன்றில் பேசியபோது “இப்படித்தான் ஒரு முறை டி.ராஜேந்தரும், விசுவும் இயக்குனர் சங்கத் தேர்தலில் எதிர் எதிரே போட்டியிட்டனர். அப்போது ஒரு முறை டி.ராஜேந்தர் ஒரு கூட்டத்தில் ‘நான் சினிமாவுக்குள் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ரோட்டோரத்தில் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துக்கிடந்தேன்’ என அழுதுகொண்டே பேசி அனுதாப ஓட்டுக்களை வாங்க நினைத்தார்.
அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘யோவ், இதெல்லாம் என்ன இந்த நாட்டுக்காகவா செய்தாய். உனக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டாய். நீ அப்போ கஷ்டப்பட்ட இப்போ நல்ல இருக்க. மற்றவர்களுக்கு எதுவும் கொடுத்தாயா? அவனவன் முன்னேற்றத்துக்கு அவனவன் கஷ்டப்படுறான். இதுல என்ன தியாகம் இருக்கு?’ என கேட்டாராம்.
இதையும் படிங்க: தன்னை கண்டபடி திட்டிய டாப் நடிகைக்கு வாய்ப்பு வழங்கிய ரஜினிகாந்த்… இப்படி ஒரு பெருந்தன்மையா??
அதைத்தான் நானும் கேட்கிறேன். விஜய் கஷ்டப்படுகிறார் என்றால் அவரது சம்பளமான 130 கோடியை நமக்காகவா தரப்போகிறார்? அவர் கஷ்டப்படுவது அவருக்காகத்தானே. அதே போல் வம்சி பைடிப்பள்ளி கஷ்டப்படுவதும் அவருக்காக, நமக்காகவா கஷ்டப்படுகிறார்கள்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.