More
Categories: Cinema History Cinema News latest news

ரசிகரை கைநீட்டி அடிக்க முயன்ற கே.எஸ்.ரவிகுமார்… அவ்ளோ கோபமா மனுஷனுக்கு..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல், சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், அல்டிமேட் ஸ்டார் அஜீத்குமார் என பல முன்னணி நட்சத்திரங்களுக்குப் பல சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிகுமார்.

அதிலும் சரத்குமாரின் நாட்டாமை, ரஜினியின் முத்து, கமலின் தசாவதாரம், அஜீத்தின் வரலாறு படங்கள் எக்காலத்திலும் மறக்க முடியாதவை. இவரது படங்கள் வெற்றி பெற என்ன காரணம் என்றால் அது சாதாரண பாமர ரசிகனுக்கும் கூட புரியும் வகையில் இருக்கும்.

Advertising
Advertising

இதையும் படிங்க… சிவாஜியிடம் கடைசியாக ஏதோ சொல்ல ஆசைப்பட்ட எம்.ஜி.ஆர்!.. புதைந்து போன ரகசியம்!…

எளிமையான திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கும். அதே நேரத்தில் காதல், ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், பாட்டு, பைட் என அத்தனை சுவாரசியங்களும் படத்தில் கட்டாயம் இருக்கும். அப்படிப்பட்ட திரை உலக ஜாம்பவான் இயக்குனர் தான் கே.எஸ்.ரவிகுமார். இவரது திரையுலகப் பயணத்தில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.ரவிகுமார் தான் இயக்கிய படங்களை தியேட்டருக்குப் போய் பார்ப்பாராம். ஒரு படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கே.எஸ்.ரவிகுமார் அந்தப் படத்தை எப்படி ரசிக்கிறாங்கன்னு பார்க்கறதுக்காக அந்தப் படத்தை இயக்கிய இயக்குனருடன் தியேட்டருக்குப் போனாராம். அப்போது அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து விட்டு படத்தோட டைரக்டரை ஒரு ரசிகர் படுகேவலமான வார்த்தைகளால் திட்டினாராம்.

அதைப் பார்த்த கே.எஸ்.ரவிகுமார் அந்த ரசிகரை உடனே அடிக்கப் போய்விட்டாராம். அடுத்த நொடியே அவரது சட்டையைப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு வந்தார் அந்தப் படத்தோட டைரக்டர். அவர் அவனை ஏன் அடிக்கப் போறீங்க? அவன் காசு கொடுத்துப் படம் பார்க்க வந்துருக்கான். இந்த 3 மணி நேரத்துக்கு அவன் தான் எஜமான்.

நம்மைத் திட்டுறதுக்கு அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அவன் திட்டுறது பிடிக்கலைன்னா நாம இங்க இருக்கக்கூடாது. அவ்வளவு தானே தவிர அவனை அடிக்கிறதுக்கு எந்த விதத்திலும் நமக்கு உரிமை இல்லை என்று ரவிகுமாரிடம் சொன்னாராம்.

இதையும் படிங்க… ரஜினியை பந்தயமா வச்சு ரேஸில் குதிக்க போகும் தயாரிப்பு நிறுவனங்கள்! தலைவர் கைவசம் இத்தனை படங்களா?

அன்று முதல் தான் இயக்கிய படத்தையும் தியேட்டரில் சென்று பார்க்கக்கூடாது என்ற முடிவை கே.எஸ்.ரவிகுமார் எடுத்துவிட்டாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Published by
sankaran v

Recent Posts