ஷங்கரை வளர்த்துவிட்டது நான் தான்... ஆனா எனக்கு உதவி செய்யல... கதறும் பிரபல தயாரிப்பாளர்

by Akhilan |   ( Updated:2022-10-28 07:38:03  )
ஷங்கர்
X

ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு யாருமே உதவி செய்யவில்லை என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளியான முதல் படம் ஜென்டில்மேன். தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் இப்படத்தினை தயாரித்தார். இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். அப்போதைய காலத்தில் மிகப்பெரிய அளாவில் பட்ஜெட் செலவை கொண்ட படம் இதுதான். 'ஜென்டில்மேன்' கதையை பல தயாரிப்பாளர்கள்கிட்ட சொல்லியிருக்கார், ஷங்கர். யாரும் அதைப் படமா எடுக்க முன்வரலை.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

ஒருநாள் கே.டி.குஞ்சுமோனை பார்த்து கதை சொல்லி இருக்கிறார். அவருக்கு ரொம்ப பிடித்து போனது. உடனே ஓகே சொல்லி இருக்கிறார். இசையமைப்பாளரா ஏ.ஆர்.ரஹ்மான் சார் இருந்தா நல்லாயிருக்கும்னு ஷங்கர் கேட்க உடனே குஞ்சுமோன் ஓகே சொன்னாராம். படத்தின் நாயகனாக முதலில் சரத்குமாரை தான் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு கதை பிடிக்கவில்லை. டாக்டர் ராஜசேகர்கிட்ட கேட்க அவருக்கு கால்ஷீட் பிரச்னையால பண்ண முடியவில்லையாம். இதை தொடர்ந்தே அர்ஜூன் இப்படத்தின் நாயகனாக ஆகி இருக்கிறார்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

படத்தினை முதலில் யாரும் வாங்க முன்வரவில்லையாம். தொடர்ச்சியாக பல பிரச்சனைகளை சந்தித்த பிறகே ரிலீஸ் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுக்கப்பட்டது. ஷங்கருக்கு தயாரிப்பாளர் சொந்தமா ஒரு பிளாட், கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஆனால் தனக்கு உதவி தேவைபட்ட போது ஷங்கர் வரவில்லை எனக் கூறி இருக்கிறார் கே.டி.குஞ்சுமோன்.

Next Story