வலிமை பட நடிகையுடன் இணைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.... இவருக்கு இப்படி ஒரு ஜாக்பாட்டா?
வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் பல குடும்பங்கள் தங்கள் வீட்டு செல்லப்பிள்ளையாக கொண்டாடும் நடிகர் தான் குமரன் தங்கராஜன். இவருக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. ஏனெனில் இவர் அந்த அளவிற்கு பிரபலம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் தான் குமரன். இந்த சீரியலில் பலர் இருந்தாலும் கதிர் பார்க்க பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் இருப்பதாலோ என்னவோ இவருக்கு மட்டும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் குமரன் ஒரு நடிகர் என்பதை தாண்டி அடிப்படையில் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குமரன் தனது நடனத்தால் பலமுறை பல நிகழ்ச்சிகளில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஆனால் சீரியலில் அவரது நடனத்திற்கு தீனி போடும் விதமாக எதுவும் அமையவில்லை.
இந்நிலையில் தற்போது அந்த குறை நீங்க உள்ளது. ஆம் அதன்படி இதுவரை சீரியலில் மட்டுமே பார்த்து ரசித்து வந்த குமரனை இனி வெப் தொடரில் பார்க்க பேகிறோம். ஆமாங்க குமரனின் நடிப்பு திறமைக்கும், நடன திறமைக்கும் தீனி போடும் விதமாக ஒரு கதை அமைந்துள்ளது. அதன்படி இந்த வெப் தொடருக்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
மேலும் இந்த வெப் தொடரில் குமரன் மட்டுமின்றி பல சின்னத்திரை பிரபலங்கள் நடிக்கின்றனர். அந்த வகையில் பிரபல சின்னத்திரை நடிகர் அமித் பார்கவ், கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். இதில் நடிகை சைத்ரா ரெட்டி சமீபத்தில் வெளியான வலிமை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புல்லட் புரபோசல் என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரில் இதில் குமரனுக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் எந்த தகவலும் உறுதியாகவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.